தமிழ்நாட்டில் ஊரடங்கால் புதுச்சேரியில் சுற்றுலா தொழில் முடக்கம்!

Update: 2022-01-24 03:58 GMT

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் புதுச்சேரியில் சுற்றுலா தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் அத்தொழிலை நம்பியுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றது. இதனால் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனிடையே புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் முழு ஊரடங்கால் வாகனங்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பியதால், புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டும்தான் சிலர் வந்திருப்பதை காண முடிந்தது.

Source: Daily Thanthi

Image Courtesy: The Indian Express

Tags:    

Similar News