"கொரோனா தடுப்பூசி போடாதவர்கள்" பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை! புதுச்சேரி அரசு உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அதே சமயத்தில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-12-05 02:55 GMT

புதுச்சேரியில் கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அதே சமயத்தில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்கிறார். இதற்கிடையில் தற்போது ஒமைக்ரான் என்ற வைரஸ் உலகத்தை அச்சுறுத்த வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 3 பேருக்கு தற்போது உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றை தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பொது இடங்களில் கூடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News