"கவர்னர்கள் அனைவரும் திறமைசாலிகள், பிரச்னைகளை அணுக தெரிந்தவர்கள்"- தமிழக ஆளுநருக்கு ஆதரவாக டாக்டர் தமிழிசை!

Update: 2022-02-05 12:05 GMT

"கவர்னர் என்றால் ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பவர் என்ற தோற்றம் தவறு. அவர்கள் அனைவரும் திறமைசாலிகள்" என்று  தமிழக ஆளுநருக்கு ஆதரவாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குரல் கொடுத்துள்ளார்.


நீட் தேர்வு விலகல் மசோதாவை தமிழக ஆளுநர் ரவி அவர்கள் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது. 


'நீட்' என்னும்  பொது நுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்பை கனவு காணும்  ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இத்தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நீட்தேர்வு விலகல் மசோதாவை கவர்னருக்கு அனுப்பி அரசியல் லாபம் தேட நினைத்தது தி.மு.க அரசு.

ஆனால் கவர்னர், அதை திருப்பி அனுப்பிவிட்டார். கவர்னரின் இச்செயலால் 'நீட்' தேர்வு முறையை எதிர்க்கும் இயக்கங்கள் இடமிருந்து பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக ஆளுநருக்கு ஆதரவாக தன் கருத்துக்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: கவர்னர்கள் தங்களுக்குள்ள உரிமையை தான் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவரும் திறமைசாலிகள். ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பவர்கள் என்ற தோற்றம் முற்றிலும் தவறு. நீட் தேர்வு விலகல் மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியதில் எந்தத் தவறும் இல்லை.

Tags:    

Similar News