பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்க முயற்சிக்கும் புதுவை அரசு.. சபாநாயகரின் அறிவுரை!

பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என சபாநாயகர் செல்வம் கூறினார்.

Update: 2023-06-03 02:37 GMT

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி துறையின் ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் இந்திய யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள் பங்கேற்கும் உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த இரண்டு நாள் கருத்தரங்கம் சன்வே ஓட்டலில் தொடங்கியது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு அமைச்சர் சாய் சரவணன்குமார் தலைமை தாங்கினார். மத்திய அரசு இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் பல்வேறு இது தொடர்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் தற்போது புதுவையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கருத்தரங்கை தொடங்கி வைத்து சபாநாயகர் செல்வம் பேசுகையில், சத்தான உணவு தற்போது சூழ்நிலை காரணமாக உணவு வகைகள் மாற்றப்பட்டு வருகிறது. நாம் சத்தான உணவை உட்கொண்டால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். அயல்நாட்டினர் பயன்படுத்தும் பாஸ்ட் புட்டுகளை அதிகமாக மக்கள் உண்ண ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால் அவை உடல் நலத்திற்கு ஆரோக்கியம் அல்ல.


பலர் நாகரீகமாக கருதுகின்றனர். நமது பாரம்பரிய உணவுகளை மறந்து போய்விட்டோம். இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது குறிப்பாக பிறக்கும் இளம் குழந்தைகள் கூட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனை தடுக்கும் பொருட்டு மீண்டும் சிறுதானியத்தை ஊக்குவித்து பல்வேறு முயற்சிகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது என அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News