நள்ளிரவில் கடலூர், புதுச்சேரி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு: என்ன நடந்தது?
புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று (ஏப்ரல் 17) நள்ளிரவில் முள்ளோடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தனியார் திருமண மண்டபம் அருகாமையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயர்மின் வயர் அறுந்து மின்கசிவு ஏற்பட்டது மட்டுமின்றி மின்கம்பம் ஒன்றும் சாய்ந்து கிடக்கிறது என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இருட்டாக இருக்கும் சமயத்தில் அறுந்து விழுந்த மின்கம்பிகள் சாலையில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து விபத்து தடுப்பதற்காக கடலூர் மற்றும் புதுச்சேரி சாலையில் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் கடலூர், புதுச்சேரியில் இருந்து வந்த வாகனங்கள் பாகூர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு, மின்துறை ஊழிர்கள் விரைந்து மின் கம்பங்களை சரி செய்தனர். இதனால் புதுச்சேரி, கடலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு வாகனங்கள் நின்றது.
Source, Image Courtesy: Daily Thanthi