புதுச்சேரி - 3 கோடியில் தொடங்கப்பட்ட புதிய பாதாள சாக்கடை பணி!

புதுச்சேரியில் மூனே முக்கால் கோடியில் பாதாள சாக்கடை இணைப்பு பணி முதலமைச்சரால் தொடங்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-12-16 03:36 GMT

புதுச்சேரியில் மத்திய அரசின் தலைமையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகச் பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் புதுச்சேரி அரசாங்கத்திற்கு செய்து கொண்டு வருகிறது. மத்திய அரசாங்கம் அந்த வகையில் தற்போது ஒரு உருளையன்பேட்டை, நெல்லி தோப்பு, கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருகிறது.


சுமார் 3:30 கோடியை 34 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கழிவுநீர் உட்கோட்ட பிரிவு மூலமாக பாதாள கழிவுநீர் தொட்டிகளில் குழாய்கள் அமைந்த சுமார் மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட 1500 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்காக அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்த நிகழ்ச்சிக்காக தலைமை தாங்கினார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் எம்.எல் ஏக்கள் நேரு ரமேஷ் ஜான் குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சுகாதாரக் கூட்ட செயற்பொறியாளர் முருகானந்தம் உதவி பொறியாளர் வைத்தியநாதன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இந்த பாதாள சாக்கடை இணைப்பு பணியின் மூலம் சுமார் 1500க்கும் வீடுகளுக்கு பல சாக்கடை இணைப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News