திருக்காஞ்சியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு!

திருக்காஞ்சியில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை துணை ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

Update: 2021-12-25 07:45 GMT

திருக்காஞ்சியில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை துணை ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரி, வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் புகழ்பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மண்டபத்துக்கு செல்கின்ற வழியில் உள்ள சாலையை ஆக்கிரமித்து 3 வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதனால் மண்டபத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறைக்கு புகார் சென்றது. 


இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டும், மாற்று இடத்தில் வீடு கட்டிக்கொள்வதற்கு இடமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அங்கு செல்லாமல் கோயில் இடத்திலேயே தங்கியிருந்தனர். இந்நிலையில், வில்லியனூர் துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News