கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும்! புதுச்சேரி சட்டசபையில் ஆளுநர் தமிழிசை உரை!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-26 13:35 GMT

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இதில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்ற வருகை தந்தார். அவருக்கு போலீசார் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து சட்டசபை வரலாற்றில் முதன் முறையாக தமிழில் ஆளுநர் ஒருவர் உரையாற்றினார் என்றால் அது தமிழிசை சவுந்தரராஜன் மட்டுமே என்று கூறப்படுகிறது. ஆம் அவர் இன்று தமிழில் பட்ஜெட் கூட்டத்தொடரை உரையாற்றினார்.

முதலில் திருக்குறளை மேற்கோள்காட்டி தனது உரையை துவக்கினார். அப்போது மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், தற்போது அரசு கட்டுப்படுத்தி உள்ளது. இதற்காக பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றி எனக் கூறினார். தொற்றை முழுவதும் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும், 250 காய்கறி விதைப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை 9 பவர் டிரில்லர்கள், நெல் நடவு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் 2020 மற்றும் 21ம் நிதியாண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8,419 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. வருவாய் பெருக்கின்ற வகையில் மாநில பட்ஜெட் அமையும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2831022

Tags:    

Similar News