பசியை போக்க அன்றே வழிகாட்டியவர் வள்ளலார்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!

Update: 2022-07-28 10:39 GMT

புதுச்சேரி தலைமை ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பாக வள்ளலார் 200 என்ற பெயரில் வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது.

இதற்காக அதிகாலை அகவல் படித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு சுத்த சன்மார்க்க நீதிக் கொடியை சாது சிவராமன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து சுத்த சன்மார்க்க கொள்கை விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் மாவட்ட தலைவர் சுகுமாறன் தொடங்கி வைத்தார்.

மேலும், மாநாட்டை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: வள்ளலார் பற்றி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் என்ன செய்யனும், எதை செய்யக்கூடாது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்து சொன்ன தீர்க்கதரிசி வள்ளலார். மேலும், நோயினும் கொடிய நோய் பசி. அந்த பசிசை போக்குவதற்கு அவர் அன்றே வழிகாட்டியாக இருந்தவர். நாம் வள்ளலாரை படிக்க, படிக்க வாழ்க்கையானது தூய்மை பெறும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Twitter

Tags:    

Similar News