அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள்: புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்!

Update: 2022-05-08 09:40 GMT

புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏனாம் பகுதியில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை வகித்தார்.

அதன் பின்னர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் சார்பில் முதியோர் மற்றும் விதவைகள் 158 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இதில் விவசாயிகளுக்கு கொசுவலை வழங்கப்பட்டது.

Source, Image Courtesy: Malaimalar

Tags:    

Similar News