புதுச்சேரி மாநில அந்தஸ்த்து குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதென்ன?

புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-12-26 03:01 GMT

புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் முடிவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'புதுச்சேரி வளர்ச்சி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சி நடப்பது தான் காரணம். எனவே ஒன்றும் நடக்கவில்லை என்பதெல்லாம் உண்மை அல்ல.

புதுவை முதலமைச்சர் உடன் சுகாதார மேம்பாட்டுக்காக ஆலோசனை நடத்தி உள்ளேன், புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் இதற்கு முன் எம்.பி'யாக இருந்தவர்கள் எல்லாம் பாராளுமன்றத்தில் எத்தனை முறை பேசினார்கள்? புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாநில விவகாரம் பல ஆண்டு கால பிரச்சனை அதனை உடனடியாக சரி செய்ய முடியாது!

அதற்காக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் அங்கு அனுமதி பெற வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது' என கூறினார் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்.


Source - Maalaimalar 

Similar News