2,000 ரூபாய் செல்லாதது குறித்து புதுவை ஆளுநரின் நச் பதில்..

நாம் போடும் கோட்டும் ஒயிட், என்கிட்ட இருக்கும் பணமும் ஒயிட் என 2000 ரூபாய் செல்லாதது குறித்து கவர்னர் தமிழிசை கருத்து.

Update: 2023-05-20 14:17 GMT

பண மதிப்பிழப்பிற்குப் பிறகு ரிசர்வ் வங்கி 2000 ரூபாயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்பொழுது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்களிடம் இருக்கும் 2000 ரூபாய்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. எனவே பணம் மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சி தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் விவாதங்களும் எழப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு நடவடிக்கை குறித்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தன்னுடைய பதிலை கொடுத்து இருக்கிறார்.


நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், என்னிடம் இருக்கும் பணமும் ஒயிட் எனவே எனக்கு கவலை இல்லை. 2000 ரூபாய்களை ரிசர்வ் வங்கி செல்லாது என்று கூறியது தனக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியிருக்கிறார். இன்று தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். குறிப்பாக அந்த ஒரு பேட்டியின் இப்போது இது பற்றி அவர் கூறுகையில், " பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு பல்வேறு மாணவ மாணவிகள் தற்கொலை எண்ணத்திற்கு வருகிறார்கள்.


குறிப்பாக குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்திற்காக அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காக தற்கொலை முடிவுகளை சுலபமாக எடுத்து விடுகிறார்கள். வாழ்க்கையில் தேர்வு என்பது ஒரு பகுதி மட்டும் தான், தேர்வை தாண்டி பல்வேறு செயல்கள் இருக்கின்றன. தேர்வு எழுதாமல் பல்வேறு நபர்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். எனவே அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் " என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News