உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாயின் மாளிகை வீடு விற்பனை: விலை சுமார் 238 கோடி !
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாய் ஒன்றின் மாளிகை தற்பொழுது விற்பனையாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உலகின் ஆடம்பரமான மாளிகைகள் மற்றும் வீடுகள் நிறைய விலைக்கு விற்பனையாகிறது என்று செய்திகள் அவ்வபோது வெளிவந்து ஆச்சரியப்படுத்தும். மியாமியில் விற்பனையான ஒரு மாளிகைப் பற்றி தற்போது வெளியான செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாளிகையின் விலை 32 மில்லியன் டாலர் என்பதைத் தாண்டி, இந்த மாளிகைக்கு சொந்தக்காரர் ஒரு நாய் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 238 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மாளிகைக்கு சொந்தக்காரர் ஒரு கந்தர் VI என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த நாய் என்று செய்தி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
பரம்பரை சொத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமா? என்று சொன்னால், அது விலங்குகளுக்கும் பொருந்தும். அதிலும் குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள் சார்பாக வழங்கப்படும் சொத்துக்கள் மனிதர்களைவிட ஏராளமாக இருக்கின்றன என்று கூறுகிறது ஒரு சர்வே முடிவு. தன்னுடைய தாத்தாவான கந்தர் IV இன் 500 மில்லியன் டாலர் சொத்தை பெற்று, உலகிலேயே பணக்கார நாயாக கந்தர் VI அறிவிக்கப் பட்டது. மியாமியில் இருக்கும் டஸ்கன் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்த, இந்த நாய்க்குச் சொந்தமான மேன்ஷன் 238 கோடி ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது. நாய்களின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை யார் எழுதியது என்பது பற்றிய தகவலை தேடும்போது ஆச்சரியமூட்டும் பல செய்திகள் கிடைத்தன.
கர்லோட்டா லெய்பென்ஸ்டீன் என்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்மணி, கந்தர் III நாயை வளர்த்து வந்துள்ளார். 1992 ஆம் ஆண்டில், கர்லோட்டா இறக்கும் முன், ஒரு டிரஸ்ட் உருவாக்கி 58 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தை தனது வளர்ப்பு நாயின் பெயரில் மாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஒரு குழு நியமிக்கப்பட்டு, கந்தர் III இன் வம்சாவளியை அனைத்து வசதிகளோடும் பராமரித்து வருகிறது. கந்தர் குழுவில் இயங்கும் இத்தாலிய நாட்டு வணிகர்களால் இந்த டிரஸ்ட் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Input & Image courtesy:Narcity