உணவுப் பொருட்களுக்காக சுமார் 544 கிமீ பயணம் செய்கிறார்களாம் இந்த மக்கள் !

உணவு மற்றும் மளிகை பொருட்களுக்காக சுமார் 544 கிமீ அளவில் பயணத்தை மேற்கொள்ளும் இந்த பெண்ணின் சாதனை.

Update: 2021-12-01 14:07 GMT

பொதுவாக அனைவரும் உணவுப் பொருட்களுக்காக வீட்டில் அருகிலிருக்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை நம்பி இருப்பார்கள். ஆனால் இந்த பகுதியில் இருக்கும் மக்கள் மட்டும் டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சொல்ல வேண்டுமென்றால் சுமார் 544 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறார்கள். வடமேற்கு கனடாவின் (ஒரு பிரதேசம் தான் யூகோன். மலை, க்ளுவான் தேசிய பூங்கா மற்றும் ரிசர்வ் கனடாவின் மிக உயரமான சிகரமான லோகன் மவுண்ட் மற்றும் பனிப்பாறைகள், பாதைகள் மற்றும் அல்செக் நதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பிரதேசத்தில் குறைந்த மக்களே வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வருபவர் பிரபல பெண் டிக்டாக்கரான சினேட் மீடர். இவருடைய கதைதான் தற்பொழுது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 


கனடாவின் தொலைதூர நகரமான யூகோனில் வசிக்கும் இவர், தனது மளிகைப் பொருட்களை வாங்க ஆபத்தான மற்றும் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். ஏனென்றால் மிகவும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் யூகோனில் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டும் இல்லை. எனவே அருகிலிருக்கும் டவுனுக்கு சென்று அங்கிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தனக்கு தேவையான மளிகை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்கிறார். எனவே சினேட் மீடர் ஒவ்வொரு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒரு முறை சூப்பர் மார்கெட்டிற்கு செல்கிறார். 


இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீடர், வழக்கமான மளிகை பொருட்களைப் வாங்க தனது வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் நீண்ட மற்றும் ஆபத்தான 2 நாள் பயணத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இவரது இந்த நீண்ட பயணத்தை இன்னும் சவாலாக ஆக்குவது என்னவென்றால் சில பகுதிகளில் பயணிக்கும் போது தொலைபேசி சேவை கிடைக்காது என்பதே. தனது சொந்த காரை இந்த பயணத்திற்கு பயன்படுத்தினாலும் போய்வர மொத்தம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் ஆகும் என்ற நிலையில் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் இந்த பயணம் கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறி இருக்கிறார் 

Input & Image courtesy: Times now News



Tags:    

Similar News