நரேந்திர மோடி தெரு பற்றி பதிவு செய்த S. G.சூர்யா: பயந்து போய் போர்டை காலி செய்த தி.மு.க நிர்வாகம்?

எஸ்.ஜே சூர்யா அவர்கள் நரேந்திர மோடி பெயர் கொண்ட தெருவின் அறிவிப்பு பலகையின் முன் நின்ற புகைப்படத்தை பதிவிட்டார்.

Update: 2023-03-14 00:57 GMT

தமிழகத்தில் ஒரு சில பெயருக்கு இருக்கும் மரியாதைகள் தற்போது இன்றளவும் இருந்து வருகிறது. மரியாதை நிமித்தம் காரணமாக பல்வேறு ரயில் நிலையங்கள் மற்றும் கல்லூரிகள், வளாகங்கள், பஸ் ஸ்டாண்டுகள், தெருக்கள் போன்ற பலவற்றிற்கு சமுதாயத்தில் மக்களின் நன்மதிப்புகளை பெற்ற பலரின் பெயர்களை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது தென்காசியில் இருக்கும் தெரு ஒன்றிற்கு நரேந்திர மோடி தெரு என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு சில நபர்களுக்கு மட்டும் தான் தெரியும் இவர்களுடைய பெயர் இதனுக்கு சூட்டப்பட்டு இருக்கிறது என்று, அந்த வகையில் தற்பொழுது தென்காசியில் உள்ள ஒரு தெருவிற்கு நரேந்திர மோடி அவர்களின் பெயர் சூட்டப்பட்டு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?


தமிழக பாஜக மாநில செயலாளர் S.G.சூர்யா அவர்கள், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தென்காசி நிகழ்வுகள் பற்றிய பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தென்காசியில் நரேந்திர மோடி தெரு என்று அறிவிப்பு பலகை இருந்த இடத்தின் முன்பு புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நரேந்திர மோடி தெரு பற்றி பதிவு செய்த ஒரு சில மணி நேரத்தில் அந்த போர்டை நீக்க ஆட்களை அனுப்பியுள்ளது செங்கோட்டை பேருராட்சி.


தி.மு.க நிர்வாகத்தின் கீழ் எத்தகைய துறைகள் சிறப்பாக செயல்படுகிறதோ? இல்லையோ? ஆனால் தங்களுக்கு ஏற்ற மாதிரி துறைகளை சாதகமாக செயல்படுத்தி பல்வேறு அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். இதுவே ஒரு தெருவில் தண்ணீர் வரவில்லை, தெரு விளக்கு இல்லை என்று சொன்னால் ஆட்கள் வருவதில்லை. ஆனால் அறிவிப்பு பலகையை பார்த்து குறிப்பாக அதில் நரேந்திர மோடி அவர்களின் பெயர் இடம் பெற்று இருப்பதை அறிந்த தி.மு.க மும்முறமாக அதை அப்புறப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. மக்களுக்காக எப்பொழுதுதான் இவர்கள் வேலை செய்யப் போகிறார்கள் என்பது புலப்படவில்லை.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News