தங்கம் பூமியில் தோன்ற காரணம் என்ன? ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கருத்து !

தங்கம் எப்படி பூமியிலிருந்து தோன்றுகின்றது என்பது ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.;

Update: 2021-11-21 13:28 GMT

தற்பொழுது ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் பேரழிவு நிகழ்வுகள் மூலம் கன தனிமங்களான தங்கம் மற்றும் யுரேனியம் போன்றவை உருவாகி இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக தங்கம் போன்ற தனிமங்கள் உருவாகிய விதம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நிச்சயமாக விண்கல் வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தான் இத்தகைய தனிமங்கள் பூமியில் தோன்றி இருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் மிகவும் மர்மமாகவே அறியப்படும் பிளாக் ஹோல் பகுதியிலிருந்து பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற தனிமங்கள் பூமியில் உருவாகி இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இத்தகைய பிளாக் ஹோலில் இருக்கும் அடர்த்தியான மற்றும் அதீத சூடான பொருட்கள் காரணமாக இரண்டு மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதல் ஏற்பட்டு தனிமங்கள் போன்ற பொருட்கள் பூமியில் தோன்றியிருக்கலாம். புவியீர்ப்பு அலைகள் மற்றும் மின்காந்த அலைகள் குறித்து கண்காணித்ததில், அண்டத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இந்த தனிமங்கள் தோன்றியிருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் நிகழ்வுகள் காரணமாக இந்த தனிமங்கள் தோன்றியிருக்குமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஜெர்மன், ஜப்பான் நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கன தனிமங்கள் எப்படி? பிளாக் ஹோலில் இருந்து தோன்றியுள்ளன என்பதை கணிணி மூலமாக உருவகப்படுத்தி காட்டியுள்ளனர். எனவே ஆராய்ச்சியாளர்களில் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்திற்கு வர உள்ளன. இருந்தாலும், துள்ளியமாக இதுபற்றிய விவரங்களை தெரிவிக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. 

Input & Image courtesy: Dailythanthi



Tags:    

Similar News