500 ரூபாய் கொடுத்தால்தான் பிணத்தை உள்ளே வைப்பேன் என்ற அரசு மருத்துவமனை - இதுதான் திராவிட மாடலா என கொதித்த மக்கள்!

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பிண அறையிலும் நடக்கும் ஊழல்.

Update: 2022-12-04 03:17 GMT

ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவ உதவி பணியாளர்கள் லஞ்சம் கேட்ட  சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. அரசு மருத்துவமனையில் அதிகமாகவே தற்பொழுது ஊழல் குடியேறி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் நுரையீரல் பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாகவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.


தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த இரண்டு தினங்களாக ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். அப்பொழுது அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருக்கிறார். மருத்துவமனையில் மனோகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.nஇதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் மனோகரின் உடலை கேட்டிருக்கிறார்கள்.


பதிவு செய்துவிட்டால் பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் உடலை கொடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து உறவினர்கள் மனோகரனின் உடலை கேட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக அங்கு பிண அறையில் பணியாற்றி வரும் மருத்துவ உதவி பணியாளர் இளையராஜா என்பவர் உடலை பிணவரையில் வைப்பதற்கு ரூபாய் 500 பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். உறவினர்கள் அவர் கேட்ட பணத்தை கொடுத்து இருக்கிறார்கள். இருந்த பொழுதிலும் உடலை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இளையராஜா வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முயற்சிக்கிறார். அப்போது மனோகரனின் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் போலீசாரிடம் சென்று இருக்கிறது. மேலும் லஞ்சம் கேட்ட மருத்துவ பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்து இருக்கிறது.

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News