கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை: பிளாக்செயின் தொழில்நுட்பமும் தேவை ஏன்?
கிரிப்டோகரன்சி ஒழுங்கு முறைகளைப் பின்பற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்பட இருப்பது ஏன்?
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2022 இல், வரும் நிதியாண்டில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) அறிமுகப்படுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார் . இந்திய ரிசர்வ் வங்கி, பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் CBDC ஐ அறிமுகப்படுத்தி டிஜிட்டல் கரன்சிகளை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு டிஜிட்டல் நாணயம் அல்லது CBDC என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். CBDC அல்லது டிஜிட்டல் நாணயம் என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். ஆனால் பிளாக்செயின் என்பது டிஜிட்டல் முறையில் விநியோகிக்கப்பட்ட பரவலாக்கப்பட்ட லெட்ஜர் அமைப்பாகும். இது தொகுதிகளின் தகவல்களை மொத்தமாக சேமித்து வைத்திருக்கும்.
பிளாக்செயின் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயமானது, CBDC வைத்திருப்பவரின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் RBI ஐ கட்டுப்படுத்த அனுமதிக்கும். மேலும் இதைப் பயன்படுத்தும் பயனர் முடிவில் தனியுரிமை தக்கவைக்கப்படுகிறது. சாதாரண கட்டண முறைகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு அம்சங்கள் இதில் மேம்பட்டவை என்று Proassetz Exchange நிறுவனர் மற்றும் இயக்குநர் மனோஜ் டால்மியா கூறினார். நியோபேங்க் ஃபை இணை நிறுவனர் சுமித் குவாலானி இதுபற்றி கூறுகையில், "ரிசர்வ் வங்கி தனது CBDC ஐ வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட அமைப்பை ஆராயலாம்.
பிளாக்செயின் என்பது ஒரு விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பமாகும். இதை ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்த பயன்படுத்தலாம். இருப்பினும், பிளாக்செயின் பரவலாக்கப்பட்டதால், நாணயத்தின் மீது மத்திய வங்கிக்கு முழுமையான கட்டுப்பாடு இருக்காது என்பதை இது குறிக்கிறது. ரிசர்வ் வங்கி அதன் CBDCஐ வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட அல்லது அனுமதி பெற்ற அமைப்பை ஆராயலாம்" என்று சுமித் குவாலானி கூறினார்.
Input & Image courtesy:Livemint