'இயேசு அழைக்கிறார்' அதில் 'பிழைக்கிறார்' - தமிழகம் முழுக்க பால் தினகரன் வரி ஏய்ப்பு!

'இயேசு அழைக்கிறார்' அதில் 'பிழைக்கிறார்' - தமிழகம் முழுக்க பால் தினகரன் வரி ஏய்ப்பு!

Update: 2021-01-21 08:05 GMT

கிறிஸ்தவ மதபோதகர் தினகரன் மற்றும் 'இயேசு அழைக்கிறார்' அமைப்புக்கு எதிராக வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு நிதி முறைகேடுகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுக்க வருமான வரிச்சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு  மட்டுமின்றி, 'இயேசு அழைக்கிறார்' அமைப்பு தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட்டு நிதிகளின் விவரங்களையும் முழுமையாக வெளியிடவில்லை என்றும் பல முதலீடுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மறைந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் டி.ஜி.எஸ் தினகரனின் மகனான பால் தினகரன், தமிழகத்தில் கிறிஸ்தவர்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள பிரபலமாவார். இவர் பல அமைப்புகளையும் நடத்தி வருகிறார். இது தவிர பல கல்வி நிறுவனங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கோவை காருண்யா பல்கலைக்கழகம், சென்னை பாரிமுனை, அடையாறு, உள்ளிட்ட 28 இடங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித் துறைஅதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.

கிறிஸ்தவ அமைப்பால் நடத்தப்படும் காருண்யா கிறிஸ்தவ பள்ளியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மேலும் பால் தினகரனுடன் தொடர்புடைய 28 வளாகங்களில் புதன்கிழமை வருமான வரி அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத போதகரின் வீடு மற்றும் அலுவலகங்களில் பல மணி நேரம் வருமான வரித்துறையால் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சில பகுதிகளில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

Similar News