மீண்டும் வியாழன் கோள் தாக்கபட்டதா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!

மீண்டும் வியாழன் கோள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. V

Update: 2021-09-21 12:51 GMT

தற்பொழுது வியாழன் கோள் தாக்கப்பட்டதாக செய்திகள் பெரும்பாலும் கூறப்பட்டு வருகிறது. இது உண்மையா? இல்லையா? என்பது தொடர்பாக அமெச்சூர் வானியலாளர் ஆதாரங்களைக் கண்டுபிடித்த பின்பு தான் இதைத் தற்பொழுது உறுதிப்படுத்தி உள்ளார்கள். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, இதுபற்றி நிறைய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், 'ஃப்ளாஷ்' தாக்கும் பொருள் பெரியதாகவோ அல்லது வேகமானதாகவோ அல்லது இரண்டாகவோ இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.



Full View


நம்முடைய சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்களுக்கிடையே நடக்கும் மாற்றங்களும் ஒவ்வொரு விஷயங்களையும் நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் ஒருபோதும் குறை வைத்ததை கிடையாது. அந்த வகையில், ஒரு விண்வெளி பாறையால் பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு கோள் தாக்கப்பட்டால் எப்படி இருக்கும். அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சமீபத்தில் வியாழன் கிரகத்தை ஒரு பெரிய விண்வெளி பாறை தாக்கிய நிகழ்வைக் கண்டறிந்த ஒரு அமெச்சூர் பிரேசிலிய வானியலாளர், அதை தனது தொலைநோக்கி மூலம் கேமராவில் படம் பிடித்தார். வியாழன் கோளை தாக்கிய அந்த பாறையின் அளவு தோராயமாக 100 மீட்டர் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் திங்கட்கிழமை மாலை, பெரேரா அந்த வணியலாளர் தனது 10 அங்குல நியூட்டோனியன் தொலைநோக்கி அத்தோம் மூலம் வியாழன் கோளை பார்த்துக் கொண்டிருந்தார். அன்று மாலை பெரிய கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகில் ஒரு பிரகாசமான வெள்ளை புள்ளியை அவர் கண்டார். அந்த ஃபிளாஷ் சில நொடிகளில் மறைந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரேரா அதை தனது கேமராவில் பதிவு செய்தார். பின்னர் பெரேரா 'Detect' என்ற மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோவை பகுப்பாய்வு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Input & Image courtesy:India Today



Tags:    

Similar News