தி.மு.கவின் இரட்டை வேடம் - முரசொலிக்கு கதிர் செய்திகள் பதிலடி.!
தி.மு.கவின் இரட்டை வேடம் - முரசொலிக்கு கதிர் செய்திகள் பதிலடி.!
இன்றைய முரசொலியில் "சென்னையில் உச்சநீதிமன்றம் - வில்சன் எம்.பியின் கோரிக்கையும் நமது விருப்பமும் என்ற தலைப்பில்" தென்னிந்தியாவில் உச்ச நீதிமன்ற கிளை வேண்டும் அதுவும் சென்னையில் வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.கவின் கருத்தாக முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் தி.மு.க சார்பாக சென்னையில் உச்ச நீதிமன்றம் அமைய காரணிகளாக சில அம்சங்கள் குறிப்பிடபட்டுள்ளன.
அதில் முக்கியமானவை,
1) டெல்லி உச்சநீதிமன்றம் சென்று முறையிடவும், வழக்குகளில் பங்கேற்கவும் 50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகிறது.
2) 133 கோடி இந்திய மக்கள் தொகைக்கோ 34 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர், இந்த விகிதாச்சாரம் குறைவாகும்.
3) கடந்த 2011 ஆண்டு அறிக்கையின் படி டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்கள்தான் அதிகம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். தென் மாநிலங்களில் உள்ளவர்களின் உச்ச நீதிமன்ற முறையீடு குறைவு.
என்ற மூன்று முக்கிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக சென்னையில் உச்சநீதிமன்றம் வேண்டும் என்பதை தி.மு.க இன்றைய முரசொலியின் தலையங்கம் மூலம் வலியுறுத்துகிறது.
என்ன ஒரு இரட்டை வேடம் தி.மு.கவிற்கு. தனக்கு சாதகம் எனில் இந்திய தேசத்தின் வரைபடத்தையே மாற்றுபவர்களாயிற்றே இவர்கள் பின் உச்சநீதிமன்றம் எம்மாத்திரம்?
மத்தியில் உள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் வேண்டும் என கேட்கும் இதே தி.மு.க எத்தனையோ மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்துள்ளது. அதை பற்றி குறிப்பிட்டால் தனி புத்தகமே எழுத வேண்டி வரும். இரண்டு முக்கிய நிகழ்வுகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.
தேசியப் புலனாய்வு முகமை என்கிற என்.ஐ.ஏ விஷயத்தில் தி.மு.க செய்தது என்ன என்பதை நினைவு கூறி பார்த்தால் விளங்கும்.
தமிழ்நாட்டி தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ கிளை நிறுவப்பட வேண்டும என வாதம் வந்தபொழுது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை, "தமிழகத்தில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு எனத் தனியாக ஒரு பிரிவு டி.ஜி.பி அலுவலகத்தில் இருக்கிறது. அதோடு, 'க்யூ பிராஞ்ச்' என்கிற தனிப்பிரிவும் இருக்கிறது. இவை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி, என்.ஐ.ஏ-வைத் தமிழகத்தில் அனுப்பி, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து, இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் அபாயகரமான போக்கை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்'' என கூறி அரசியல் செய்தவர் ஸ்டாலின்.