விமானம் மற்றும் ரயிலுக்கு இடையில் நூலிழையில் உயிர் தப்பிய நபரின் வீடியோ!

விமானம் மற்றும் ரயில் இடையில் நூலிழையில் உயிர் தப்பிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.;

Update: 2022-01-14 14:27 GMT

உலகில் நடைபெறும் பெரும்பாலான இழப்புகளுக்கு காரணம் விபத்துக்கள் ஆகத்தான் இருக்க கூடும். சில சமயங்களில் விபத்துகள் நம் கண்முன்னே நிகழ்ந்து  இருக்கக்கூடும் அல்லது நாம் விபத்துக்களில் இருந்து சிறிய நூலிழையில் உயிர்தப்பி இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் அமைந்துள்ளது. அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எதிர்பாராத விதமாக விமானம் ஒன்று ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.  



இந்த விபத்தில் சிக்கிய பைலட் ஒருவர், விமானத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவரை போலீசார் மீட்கும் பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. கலிபோர்னியாவின் பகோய்மாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட விமானம் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் விமானம் கடுமையான சேதம் அடைந்து உடன் அதில் பயணித்த விமானியும் காயமடைந்துள்ளார். 


விமானத்திற்குள் இருக்கும் விமானியை மீட்க போலீசார் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அதே நேரத்தல் அந்த தண்டவாளத்தில் அதிவேகத்தில் ரயில் வந்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு விமானியை மீட்க போராடினார்கள். காயத்துடன் போராடும் விமானி ஒரு பக்கம் வேகமாக வரும் ரயில் ஒரு பக்கம் என்று போலீசார் திக்குமுக்கி ஆடிவிட்டனர். கடைசி நேரத்தில் விமானி உயிரைக் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில், பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.  

Input & Image courtesy: News 18




Tags:    

Similar News