கோவில்கள் நமது கலாசாரம்... ஆன்மீக உணர்வு நமது ஆணிவேர்... - பொட்டில் அடித்தாற்போல் சொன்ன பிரதமர்!
கேரளாவின் திருச்சூரில் உள்ள ஸ்ரீ சீதாராம சுவாமி கோவில் நிகழ்ச்சியில் பிரதமர் உரை.
திருச்சூரில் உள்ள ஸ்ரீ சீதாராம சுவாமி ஆலய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு அனைவருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். ஆன்மீகம், தத்துவம் மற்றும் திருவிழாக்களுடன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலைகள் திருச்சூரில் செழித்து வளரும் நிலையில் இந்த நகரம் கேரளாவின் கலாச்சார தலைநகராக கூறப்படுவதைக் குறிப்பிட்டு பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். திருச்சூர் தனது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஸ்ரீ சீதாராம சுவாமி ஆலயம் இந்த நோக்கத்தில் துடிப்புமிக்க மையமாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோவிலை விரிவுபடுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், ஸ்ரீ சீதாராமர், ஐயப்பன் மற்றும் சிவபெருமானுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கர்ப்பகிரகம் அர்ப்பணிக்கப்படுவதைக் குறிப்பிட்டார். மேலும், 55 அடி உயர ஹனுமன் சிலை நிறுவப்பட்டதைப் பாராட்டிய அவர், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
கல்யாண் குடும்பத்தினர் மற்றும் டி.எஸ்.கல்யாண்ராமன் ஆகியோரின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், கோயில் தொடர்பாக அவர்களுடன் நடந்த முந்தைய சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வில், சிறந்த ஆன்மீக உணர்வை தாம் அனுபவிப்பதாகக் கூறி பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Input & Image courtesy: News