உலகிலேயே மிகவும் நீளமான கார்: இருபக்கமும் இயங்கக்கூடிய சிறப்பம்சம் !
உலகிலேயே மிகவும் நீளமான இந்த காரை சீரமைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உலகின் மிக நீளமான கார் என்ற புகழையும் கொண்ட லிமோசின் டைப் காரை மறுசீரமைக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இது உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986-ல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த 100-அடி நீளம் கொண்ட லிமோசின் டைப் காரை மிகவும் திறமை கொண்டடிசைனரான ஜே ஓர்பெக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தான் டெலிவிஷன் சீரிஸான Knight-ல் பயன்படுத்தப்படும் பிரபல காரையும் வடிவைமைத்தார். உலகின் மிக நீளமான கார் 'The American Dream' பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த லிமோசின் 30.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 26 வீல்களை கொண்டுள்ள இந்த நீளமான கரை இருபுறமும் இயக்க முடியும் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். 1980-களில் இதை வடிவமைக்க தொடங்கிய ஓஹர்பெர்க் இறுதியில் தனது கனவை நிஜமாக்கினார். இது வெறும் நீளமான கார் மட்டுமல்ல, ஆடம்பர சொகுசு வாகனமாகவும் டிசைன் செய்யப்பட்டது. நீச்சல் குளம், ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ஃப் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் கூட காரில் இடம் பெற்றுள்ளது.
ஒரே நேரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும் என்பதால் இது பல T.V கள் மற்றும் ஃபிரிட்ஜ்கள் மற்றும் ஃபோன் கனெக்ஷன்கள் உள்ளிட்ட இன்னும் பல வசதிகளை கொண்டது. எனவே இந்த காரை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இது பற்றிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
Input & Image courtesy:News 18