"மாமா" தயாநிதியை "அண்ணன்" என அழைத்த உதயநிதி - நாடகம் போடலாம் ஆனால் இப்படியா?

"மாமா" தயாநிதியை "அண்ணன்" என அழைத்த உதயநிதி - நாடகம் போடலாம் ஆனால் இப்படியா?

Update: 2020-11-27 08:36 GMT

அரசியல் வாழ்க்கைக்கு வந்துவிட்டால் உறவுகளை விட தலைவர், தொண்டர்கள் என பேதமில்லாமல் உழைப்பது இயல்பு அதை பொது மேடைகளில் பேசும் போது உடன்பிறந்தவராகவே இருந்தாலும் அவரை மரியாதையாக அழைப்பது வழக்கம். ஆனால் தி.மு.க'விலோ எல்லாம் தலைகீழ், அரசியல் என வந்துவிட்டார் முறை என்ன? உறவு என்ன எல்லாத்தையும் தூக்கி போடு என தன் விருப்பத்துக்கு எல்லா முறையையும் தி.மு.க மாற்றவே செய்யும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி தனது மாமா'வான தயாநிதி மாறனை "அண்ணன்" என அழைத்துள்ளார். 


கடந்த இரு தினங்களாக 'நிவர்' புயலின் பாதிப்பினால் மக்களுக்கு அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் உதவி வருகின்றனர். தி.மு.க'வும் வழக்கம்போல் தனது கேமராமேன்'கள் புடைசூழ உதவி வருகிறது. இந்த புகைப்படங்களை உதயநிதியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். 

அப்படி பதிவேற்றி வரும் உதயநிதி தனது மாமா முறையான தயாநிதி மாறனை குறிப்பிடும் பொழுது "மாமா" என குறிப்பிடாமல் "அண்ணன்" என குறிப்பிட்டு முறையையே மாற்றியுள்ளார். ஏன் இந்த நாடகம்? மக்களுக்கு தெரிந்த விஷயம் தான் உதயநிதி'க்கு தயாநிதி மாறன் "மாமா" முறை என்பது ஆனால் "அண்ணன்" என ஏன் அழைக்க வேண்டும்? உறவுக்கு ஒன்று? ஊருக்கு ஒன்றா?

இப்படி உலகம் அறிந்த உறவுமுறையையே மாற்றி பொதுவெளியில் அழைக்கும் ஸ்டாலின் குடும்பம் பதவிக்கு வர இன்னும் என்னவெல்லாம் நாடகம் போடுமோ என மக்களின் கருத்தாக உள்ளது.

Similar News