600 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட பெருச்சாளி - போலீசார் பதிலால் நீதிமன்றம் அதிர்ச்சி?
600 கிலோ கஞ்சாவை சாப்பிட்டது பெருச்சாளி என்று போலீசார் நீதிமன்றத்தில் பதிலை கூறுகிறார்கள்.
உத்திரபிரதேசம் மாநிலம் மதுரை போலீஸ் ஸ்டேஷனில் சுமார் 600 கிலோ கஞ்சா பிடிபட்டது. மேலும் பிடிபட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பெருச்சாளி தின்று விட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தது அனைவரையும் தற்போது ஆச்சரியத்தில் மற்றும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கடத்தல் காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் போலீசார உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் தரப்பில் கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
ஆனால் அதை ஏற்க முடியாது பறிமுதல் செய்யப்பட்ட 600 கிலோ கஞ்சாவையும் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் ரூமில் எலித்துளை அதிகமாக இருப்பதாகவும் எலிகள் கிலோ கணக்கில் கஞ்சாவை தின்று விட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வேறொருவரிடம் விட்டுவிட்டு எலிகள் மீது பழி சுமத்துவது தற்பொழுது தெரியவந்து இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar