தவறு செய்பவர்கள் அண்ணா மீது ஆணையாக நடவடிக்கை - தி.மு.க'வினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கையா?

Update: 2022-01-07 10:45 GMT

"தி.மு.க'வை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும் அண்ணா மீது ஆணையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வசனங்களை பேசியுள்ளார். அப்படி எனில் இதற்கு முன் தவறு செய்தவர்களை தி.மு.க என்ன செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.



இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டத்தின் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது, "காவல்துறையை ஏவல் துறையாக மாற்றிவிட்டதாக எதிர்கட்சி தலைவர் கூறினார், சட்ட சபையை சத்த சபையாக மாற்ற நான் விரும்பவில்லை தி.மு.க'வை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும் அண்ணா மீது ஆணையாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

முதல்வர் இவ்வாறு தெரிவித்தது அரசியல் உலகில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன் தி.மு.க'வில் யாருமே தவறு செய்யவில்லையா? அல்லது அப்படி தவறு செய்தவர்களை எல்லாம் தண்டித்து விட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தற்பொழுதைய முதல்வர் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன, இந்த ஆறு மாதத்தில் தி.மு.க'வில் நடந்த தவறுகள் எத்தனை? தி.மு.க உறுப்பினர்கள் சிலர் கடைகளில் அட்டூழியம் செய்தனர், தி.மு.க'வின் சமூக ஊடக பிரிவை சார்ந்தவர்கள் மாற்று கட்சியினர் சிலரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசினர், கடலூர் தி.மு.க எம்.பி டி.ஆர்.வி ரமேஷ் என்பவரின் முந்திரி ஆலையில் வேலை செய்தவர் கொலை செய்த சம்பவத்தில் தனது கட்சி எம்.பி'யாகிய குற்றம் சுமத்தப்பட்ட டி.ஆர்.வி.ரமேஷ் மீது என்ன நடவடிக்கை எடுத்தது தி.மு.க?

இப்படி பல சம்பவங்கள் தி.மு.க'வினரால் நடத்தப்படும் போது கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு தற்பொழுது சட்டசபையில் வீர வசனங்கள் பேசி கவனம் ஈர்க்க பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Similar News