தரமற்ற பொங்கல் பரிசு பொருள்கள் - கடுப்பில் மக்கள்! சமாளிக்கும் முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-01-09 13:00 GMT

"மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்" என பொங்கல் பரிசுப்பொருள்கள் தரமற்றதாக வழங்கி வருவது இணையத்தில் வலம் வருவதால் சமாளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பணம் இல்லாமல் பரிசு பொருள்கள் அடங்கிய பை மட்டும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கி வருகிறார். அதில் வழங்கப்படும் அரிசியில் வண்டு, புளியில் செத்த பல்லி, இது வெல்லம் என எழுதி போட்டால்தான் தெரியும் அளவிற்கு செம்மண் கரைசல் போல் வெல்லம் என தரமற்ற பொருள்கள் தருவமாக மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ'வை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் காட்டினார். சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் தி.மு.க அரசு வழங்கிய தரமற்ற பொருள்கள் தொடர்பாக வலம் வருகின்றன. ஏற்கனவே பணம் இன்றி வெறும் பொருள்கள் மட்டும் தி.மு.க அரசு கொடுத்ததால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.

இது அரசின் காதுகளுக்கு எட்டவே இன்று முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.





 


பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். என்னதான் முதல்வர் தரமற்ற பொருள்கள் நாங்கள் வழங்கவில்லை என கூறினாலும் மக்கள் பரிசு பொருள்களை வாங்கிய பிறகு கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது உண்மை.

Similar News