மேலும் ஒரு அழியும் நிலையில் உள்ள சிவாலயம் கண்டுபிடிப்பு - காஞ்சிபுரத்தில் ஒரு காசி விஸ்வநாதர் (@Saigeet36566874) Writes

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலை ப்ரணம்யக துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-06-21 13:35 GMT

தமிழகம் ஆன்மீக மண், இது 12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் என தமிழ் மூலம் ஆன்மீகத்தை போற்றி பாதுகாத்து நம்மிடம் விட்டு சென்ற மண். அண்ட சராசரத்தை கட்டி ஆளும் நவகிரகங்களுக்கு தனி கோவில்கள் இருப்பது இங்கேதான், சிவன் ராஜாவாக வீற்றிருக்கும் சைவ ஸ்தலமும் உள்ளது இங்கேதான், பாற்கடலில் பள்ளி கொண்ட அரங்கநாதன் வீற்றிருப்பது இங்கேதான், ராமபிரான் ராவணன் வாதம் முடித்து தன் தோஷம் நீக்கியதும் இங்கேதான், உலகின் முதல் ஸ்தலம் என போற்றப்பட்டும் ஸ்தலம் அமைந்துள்ளதும் இங்கேதான், காணக்கிடைக்காத மரகதலிங்கங்கள் அதிக அளவில் கோவில்களில் உள்ளதும் இங்கேதான். இப்படி பட்டியலிட துவங்கினால் பக்கங்கள் பத்தாது.

இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இன்று பல கோவில்கள் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து அழியும் நிலையில் உள்ளன, ஆலகால விஷம் அருந்திய நீலகண்டன் நடந்த பூமியில் ஒருவேளை கூட விளக்கு ஏற்ற வழியில்லாமல் பல கோவில்கள் உள்ளன.

இந்த நிலையில் சில பக்தி கொண்ட உள்ளங்களினால் துவங்கப்பட்ட அண்ணாமலையார் அறப்பணி குழு மூலம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலை ப்ரணம்யக துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில் செய்யாற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள திருமாகறல், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருமாகறல் என்பது பதனூபுரம், திருப்புராந்தகம் மற்றும் கிரீசபுரம் என்றும் அழைக்கப்பட்டதாக பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன. திருமாகறல் 9 ஆம் நூற்றாண்டு திருமாகறலீஸ்வரர் கோவிலுக்காகவும் புகழ்பெற்றது. இது 'பாடல் பெற்ற ஸ்தலங்களில்' ஒன்றாகும்.

காசி விஸ்வநாதர் கோயில் திருமாகறலின் தெற்கே செய்யாற்றை ஒட்டி அமைந்துள்ளது. கல்வெட்டுகளின் மூலம், இக்கோவில் கி.பி.1200 - 1500க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. திருமலை சித்தர் என்ற சித்த புருஷர் இந்த கோவிலை பராமரித்து வந்ததாகவும், அவரது ஜீவ சமாதி இந்த கோவிலிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.

21.அக்.2018 அன்று இக்கோவில் அண்ணாமலையார் அறப்பணி குழுவால் உழவாரப்பணி நடைபெற்றது. உழவாரப்பணிக்கு முன், இந்த கோவில் வெளியில் தெரியாமல் அடர்ந்த செடிகளால் முற்றிலும் மறைந்திருந்தது. குழு புதர்களை அகற்றத் தொடங்கியதும், ஒரு அழகான கோயில் தோன்றியது. அதன் சுவர்களில் ஊடுருவி வளர்ந்த அரசமரம் காரணமாக கட்டமைப்பின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. உள்ளே, குழு 6 அடி உயரமுள்ள அழகே வடிவான தேவியின் அற்புதமான சிலையை கண்டது. லிங்கம் சூறையாடப்பட்டு ஆவுடை மட்டுமே இருந்தது.

இந்த கோவில் தற்போது திருப்பணிக்கு தயாராக உள்ளது. முதல் கட்டமாக, கிராம மக்களின் ஆதரவுடன் 11 ஜூன் 2019 அன்று பாலாலயம் நிகழ்த்தப்பட்டது.

இந்த பழங்கால அதிசயம் மீண்டும் அதன் மகிமையோடு மீண்டு வரும் என்ற நம்பிக்கையோடு அங்கு வேலைகள் துவங்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

Similar News