ஜனநாயக நாடுகளுக்கு பிக் டெக் சமூக ஊடகங்கள் விடுக்கும் சவால் - அடுத்தது என்ன?
பரந்த கடலான இணையதளத்தை ஒரு சில சமூக ஊடக நிறுவனங்கள் பிக் டெக் (Big Tech) என்ற போர்வையில் கைப்பற்றியுள்ளன. தனியுரிமை, எந்தவித பொறுப்போ ஒழுங்கு இல்லாமல் இவை மிகவும் லாபகரமாக மாறியுள்ளன. இவைதான் சந்தையை உருவாக்குகின்றன, சந்தையை வளர்கின்றன, சந்தை விதிகளை வடிவமைக்கின்றன.
வரலாற்றில் எந்த ஒரு நிறுவனமும் பொருளாதாரத்தின் மீது இவ்வளவு தன்னிச்சையான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை. இந்த விபரீத சக்தி பல நாடுகளும், மக்களும் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவாலாகும். ஒரே இடத்தில் செல்வம் இருப்பது சில வகைகளில் பிரச்சினைக்குறியது. கட்டுப்பாடற்ற நிலையில் இது வருமானத்திலும் வாய்ப்பிலும் சமத்துவமின்மையை கொண்டு வருகிறது.
ஆனால் ஒரே இடத்தில் அதிகாரங்கள் குவிந்து இருப்பது அதைவிட ஆபத்தானது. எதை அனுமதிக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எது சரி, எது தவறு என்று பலவிதமான லேபிள்கள் ஒட்டப்படுகின்றன. உதாரணமாக, தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் ட்விட்டரில் தொற்றுநோய் காலத்தில் அதிக படியாக வலம் வந்தன. ஆனால் அதைவிட குறைவான ஆபத்து உள்ள பல பதிவுகளுக்கு லேபிள்கள் ஒட்டப்பட்டது.
அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் இருந்து தடை செய்யப்பட்டதற்கு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் குறிப்பிடுகையில், கருத்துக்களை கொண்டிருப்பதற்கான சுதந்திரம் முக்கியமான ஒன்றாகும் என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் சமூக ஊடக அக்கவுண்ட் கள் நிரந்தரமாக நீக்கப்பட்டது.
பிரச்சினைக்குறியது என்று கருதப்பட்டது ட்ரம்பின் டிவீட்கள் சரியா,தவறா என்பதல்ல. யார் அவரை தடை செய்வது? எந்த அளவில் வெளிப்படைத்தன்மையுடன் இது நடக்கிறது? என்பதுதான் கேள்வி. டிஜிட்டல் ரீதியாக ஒருவரை ஒருவர் இணைப்பது ஒரு 'பயன்பாடு' (utility) என்று கருதும் பொழுது, இவை மதரீதியிலான கலாச்சார மற்றும் கொள்கை ரீதியாக தடை செய்யப்படக் கூடாது. தண்ணீர், மின்சாரம், சாலை வசதிகளை போல சமூக ஊடகங்களும் தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டும். தண்ணீர், மின்சாரம், சாலை வசதிகளை ரத்து செய்வதற்கான உரிமை இப்பொழுதும் கூட அரசாங்கத்திடம் தான் உள்ளது. தனியாருக்கு இந்த உரிமை கிடையாது.