லஞ்சம், ஊழல், மிரட்டல்! முதல்வர் வரை புகார் அளித்து மனம் வெறுத்து இறுதியில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க'வில் இணைந்த பட்டியலின பஞ்சாயத்து தலைவர்
லஞ்சம், ஊழல், மிரட்டல்! கலெக்டர் முதல் முதல்வர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை - மனம் வெறுத்து இறுதியில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க'வில் இணைந்த பட்டியலின பஞ்சாயத்து தலைவர்
பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஒருவர் தன்னை நேர்மையாக தலைவர் பணி செய்ய விடாமல் ஊராட்சி மன்ற துணை தலைவர் நெருக்கடிக்கு ஆளாக்கியதால் மனம் வெறுத்து பல இடங்களில் புகார் அளித்தும் பயனில்லாமல், இறுதியில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும் அதற்கும் எந்த ப்ரயோஜனமும் இல்லாமல் இறுதியில் பாதுகாப்பு பா.ஜ.க'தான் என முடிவெடுத்து தன்னை அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி குப்புசாமி, இவர் கடந்த பிப்ரவரி மாதம் கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மற்றும் உதவி இயக்குனரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் நான் ஊராட்சி மன்ற துணை தலைவரால் பட்டியலின பெண் என்பதாலும், நேர்மையாக பணி செய்ய விடாமல் தன்னை தடுப்பதாகவும் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜே.சடையப்பன் மீது புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகார் மனுவில் அஞ்சலி குப்புசாமி கூறியுள்ளதாவது, 'நான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறேன், எங்கள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சடையப்பன் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசிய தேவையான குடிநீர் பணிகள், மின்கட்டணம், ஊழியர்கள் சம்பளம், மின்விளக்கு மற்றும் மின்மோட்டார் சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கையொப்பம் போட விடாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக கேட்டால் மிரட்டி வருகிறார். மேலும் தன்னிச்சையாக பல்வேறு கோப்புகள் மற்றும் பில்களில் கையெழுத்திட வேண்டும் என நிர்பந்தம் செய்து வருகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது என்னை மிரட்டி புகாரை திரும்பப் பெற செய்தார், இதனால் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஊராட்சி தலைவர் தலித் பெண் என்பதால் துணைத்தலைவர் குறிப்பாக கட்டிட அனுமதி நிலையங்கள் அமைக்க ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் சான்றிதழ் பெற வேண்டும் என்பதால் கட்டிட அனுமதி நிலையோடு தான் சொல்லும் இடத்தில் கையெழுத்து விட வேண்டும் என வற்புறுத்தி பணம் கொடுத்து அதை, இதை சொல்லி மிரட்டுவதாகவும் தெரிய வருகிறது.