கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவின் 'வளர்ச்சி உதவி' திட்டங்கள் அம்பலம்!
உலகின் வலிமை மிக்க சக்திகளில் முன்னணியில் இருந்தாலும் சீனாவும் அதன் கொள்கைகளும் மர்மமாகவே உள்ளன. சீனாவின் நெருங்கிய கூட்டாளிகளாக தங்களைக் கருதிக் கொள்ளும் நாடுகளுக்கு கூட சீனாவின் கொள்கைகளின் தாக்கம் பற்றி அதிகம் தெரியாது.
சீனாவின் நடத்தை கூட மர்மத்தால் சூழ்ந்துள்ளது. இது உலகத்தினுடனான சீனாவின் உறவிற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாமல் இருப்பதால் உண்மையான தரவுகள் இல்லாமல், சீனாவின் நோக்கங்களை யூகிக்க மட்டுமே முடிகிறது. இதன் விளைவாக அந்த நாட்டின் கேள்விக்குரிய ஒரு நிலைப்பாட்டை பொறுத்து முற்றிலும் எதிர்மறையான, மாறுபட்ட கூற்றுகள் யூகிக்கப்படுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் போர்க்குணம் வளர்ந்துள்ளது. வர்த்தகம், தகவல், அடுத்த நாடுகளுக்கு செய்யும் உதவி, சுகாதார ஈடுபாடு என அனைத்தையும் ஒரு உள்நோக்கத்துடன் ஆயுதபாணியாக்கியே சீனா செயல்பட்டு வருகிறது.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தவறு ஏதும் செய்ய முடியாத வளரும் நாடாக இருந்த சீனா, தற்போது உலகின் தவறான நிர்வாகங்களுக்கு மூலமாக பார்க்கப்படுகிறது. பொறுப்புள்ள ஒரு உலகளாவிய பங்குதாரராக தன்னுடைய நற்பெயரை அடிக்கோடிட்டு காட்டக்கூடிய ஒரு நேரத்தில் இருக்கும் சீனா, உலகின் வல்லரசு நாடுகளிடம் இருந்து ஒரு தாக்குதலை தூண்டுவதில் உறுதியாக உள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய மேம்பாட்டு மையம், ஜெர்மனியின் கீல் நிறுவனம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்திற்கான நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் 24 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் சீனாவின் 100 கடன் ஒப்பந்தங்களை ஆய்வு செய்துள்ளனர். இது சீனாவின் முன்னுரிமைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் தங்களுடைய ஒத்துழைப்பிற்காக "கடன் பொறி" போன்ற விஷயங்கள் சில காலமாக விவாதத்தில் இருந்த பொழுதும், பெருகி வரும் உலக கடன் நெருக்கடியில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் சீனாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இது ஒரு முதல் அனுபவ ஆய்வாகும்.