'முதல்வரை எப்படி நாங்க கூப்பிடனும்?' - அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு கப்சிப் ஆன 'மாண்புமிகு' அமைச்சர்

தமிழ் தாயை காட்சிப்படுத்துவதில் தி.மு.க மற்றும் பா.ஜ.க'விற்கு தற்போது இணையத்தில் மோதல் முற்றி உள்ளது.

Update: 2022-05-17 12:30 GMT

தமிழ் தாயை காட்சிப்படுத்துவதில் தி.மு.க மற்றும் பா.ஜ.க'விற்கு தற்போது இணையத்தில் மோதல் முற்றி உள்ளது.

'தமிழணங்கு' என குறிப்பிட்டு தலைவிரி கோலத்துடன் ஒரு ஓவியத்தை முதல்வர் ஸ்டாலின் தமிழ்தாய் என குறிப்பிட்டு நேற்று முன்தினம் அவரது டுவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார், அதனைத்தொடர்ந்து அழகின் வடிவமாய் தமிழ்த்தாயை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தற்போது அரசியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிர்ந்த தமிழன்னை புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'ஸ' என்ற சொல் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஸ என்ற பொருள் வடமொழிச்சொல் என்றாலும் 'ஸ்டாலின்' என்ற பெயரை எவ்வாறு அழைக்க வேண்டுமென விளக்குமாறு அண்ணாமலை டுவிட் செய்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது ஸ நீக்கி அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டுமென தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார் இந்த விவகாரம் இணையங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Similar News