ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கு மௌனம் காக்கும் ஸ்டாலின் - பயமா? காழ்ப்புணர்ச்சியா?

ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கு மௌனம் காக்கும் ஸ்டாலின் - பயமா? காழ்ப்புணர்ச்சியா?

Update: 2020-12-04 12:27 GMT

நேற்றைய தினம் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வருகையில் அறிவிப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல் வரும் ஜனவரி மாதம் கட்சி துவங்க வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழக அரசியல் தலையெழுத்தை மாற்ற விரும்புகிறேன் எனவும் அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலும் ஓர் அலை பரவியுள்ளது.

காரணம் தமிழகத்தில் ஆன்மீக அரசியலை உருவாக்கி நேர்வழியில் தமிழகத்தை மீட்டெடுப்பேன் என திரு.ரஜினிகாந்த அவர்கள் கூறியது இதுவரை வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் முன்னெடுத்து வந்த அரசியல்வாதிகள் மத்தியில் நல்ல எண்ணத்தை விதைக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களின் முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இது மக்கள் மத்தியில் மட்டுமின்றி இணையத்திலும் அகில இந்திய அளவில் விவாத பொருளாகவும், மைய கருத்தாகவும் நேற்று முதல் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

இந்த நிலையில் தமிழக சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் சாராத பிரபலங்கள் வரை திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் துவக்கத்தை வரவேற்றுள்ளனர். ஏன் தமிழக அரசியல்வாதிகளில் முக்கியமாக அ.தி.மு.க'வின் ஓ.பன்னீர்செல்வம் கூட "ரஜினியின் அரசியல் துவக்கத்தை வரவேற்கிறேன், அவருடன் கூட்டணிக்கு கூட வாய்ப்புண்டு" என கருத்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு எல்லாவற்றையும் தள்ளிவிட்டு முன் வந்து கருத்து கூறுவதும், அரசியலாக்கி போராட்டம் செய்வதும் என தன்னை எப்பொழுதும் மக்களின் பக்கமே என காண்பிக்க துடிக்கும் தி.மு.க'வோ திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை பற்றி ஏதும் வாய் திறக்காமல் உள்ளது.
அதன் தலைவர் ஸ்டாலினோ திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் ஏதோ ஒரு நாட்டில் நடப்பது போல் கண்டும் காணாமல் இருக்கிறார். ஏன் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை தனது அரசியல் லாபத்திற்காக போராட கையிலெடுக்கும் தி.மு.க தமிழகத்தில் அனேகம் பெயர் கொண்டாடும், ஏற்றுக்கொள்ளும் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை காணதது போல் இருப்பது ஏன்? பயமா?

இவ்வளவிற்கும் 1996'ம் தேர்தலில் அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி ஆட்சியை பிடிக்க இதே திரு.ரஜினியின் ஆரதவை தேடினார்கள். இதே திரு.ரஜினியின் ஆதரவு பெற்ற சின்னம் என தமிழக மூலைக்கு மூலை திரு.ரஜினியின் படத்தை வைத்துதான் மக்களிடையே ஓட்டு கேட்டு தேர்தலில் வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார்கள். ஆனால் இன்று அதே திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை ஓர் இங்கிதமாக கூட விமர்சிக்க தி.மு.க'விற்கும், அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வாய் வரவில்லை. ஏன் அவ்வளவு காழ்ப்புணர்ச்சியா தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு?

இவ்வளவு ஏன் தற்போதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்ணணாகிய மு.க.அழகிரி கூட வாழ்த்துக்களை கூறிவிட்டார். ஆனால் ஏதும் கூற மனமின்றி குமுறலுடன் இருக்கிறார் ஸ்டாலின். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்களே மகேசன்! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!!

Similar News