காஷ்மீரில் தொடரும் பண்டிட்கள் போராட்டம் - காரணம் என்ன?

பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் வரை பணிக்கு வர மாட்டோம் என காஷ்மீர் பண்டிதர்கள் பணியில் சேர மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-05-24 11:45 GMT

பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் வரை பணிக்கு வர மாட்டோம் என காஷ்மீர் பண்டிதர்கள் பணியில் சேர மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மே மாதம் 12ஆம் தேதி காஷ்மீர் பண்டிதர்கள் சமுதாயத்தை சேர்ந்த ராகுல் பாத் என்கின்ற அரசு ஊழியர் அவரது அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிதர்கள் ராகுல் பாத் கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் பள்ளத்தாக்கில் உள்ள பண்டிட் இனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இனி காஷ்மீரில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் துணை கவர்னர் மனோஜ் சின்கா ஷைக்பூரில் இடம் பெயர் தொழிலாளர்களான காஷ்மீர் பண்டிட் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், 'இந்த நிர்வாகம் தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டுள்ளது உங்கள் பிரச்சினைகள் நியாயமாகவும், நேர்மையாகவும் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறேன்' என்றார். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஜம்முவில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.


Source - Maalai Malar

Similar News