கன்னியாஸ்திரி அபயா கொலை போன்று திருநெல்வேலியில் அதிர்ச்சி சம்பவம்.!

பாதிரியார், காப்பக நிர்வாகி இடையிலான தவறான உறவைப் பார்த்து விட்டதால் சமையல்காரப் பெண்மணி மீது கொலை வெறித் தாக்குதல்

Update: 2021-01-30 16:46 GMT

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியபுரம் என்னும் ஊரில் ஹேர்மின்ஸ் என்னும் இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காப்பகத்தை ஜோசப் இசிடோர் என்ற பாதிரியார் நிர்வகித்து வருகிறார். இதே காப்பகத்தில் அப்பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாக சமையல் வேலை செய்து வருகிறார்.

இந்த காப்பகத்தில் அறக்கட்டளை நிர்வாகியாக இருக்கும் ஜெயலட்சுமி என்பவருக்கும் பாதிரியாருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று அந்தப் பெண்ணும் பாதிரியாரும் தனிமையில் இருக்கும் போது சமையல் வேலை செய்துவரும் ராஜம்மாள் என்பவர் எதிர்பாராத விதமாக பார்த்துவிட்டதால் அந்தப் பெண்ணும் பாதிரியாரும் சேர்ந்து ராஜம்மாளை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Caption

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜம்மாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து காவல் துறையினர் காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்திய போது காப்பக நிர்வாகி ஜோசப்பும் அங்கு வேலை பார்த்து வரும் பெண்மணியும் தனிமையில் இருந்ததைப் பார்த்து விட்டதால் அவர்கள் இருவரும் தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த காப்பகத்தில் இருக்கும் முதிய பெண்மணிகளிடம் பாதிரியார் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குடும்ப சூழல் காரணமாக வேறு வழியின்றி அங்கு வேலை பார்த்து வந்ததாகவும் காவல்துறையினரிடம் ராஜம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Caption

நார்பர்ட் தாமஸ் என்பவர் தலைமையிலான Hermines Home for the Destitute என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இந்த ஹெர்மின்ஸ் இல்லம் வெளிநாடுகளில் இருந்து பெறும் நன்கொடை மூலம் இயங்கி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஜோசப் மற்றும் ஜெயலட்சுமி இருவரும் அறக்கட்டளையில் டிரஸ்டியாக உள்ளனர். FCRA உரிமம் பெற்ற இந்த அமைப்புக்கு ஆண்டு தோறும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் உள்ள சர்ச்சுகளில் இருந்தும் சில தனி நபர்கள் மூலமும் நிதி அனுப்பப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட ₹3 கோடி நிதி வந்துள்ளது.

இதில் 2011-2014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் மட்டும் அனாதைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதற்கென்று ₹1.4 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளனர். 2010-11 நிதியாண்டில் அனாதைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு, உடை வழங்க என்று குறிப்பிட்டு ₹26 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதியில் 2018-19ஆம் ஆண்டுக்கான FCRA நிதி அறிக்கையின் படி ₹1.2 கோடி வைப்பு நிதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைப்பு நிதிக்கான வட்டி மட்டும் ₹10 லட்சம் ரூபாய் வருகிறது. மேலும் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி இங்கு சொத்துக்களும் வாங்கி வருகின்றனர். இறுதியாக 2019ஆம் ஆண்டு கையிருப்பு ₹5.7 லட்சம் ரூபாயும் வங்கியில் ₹7 லட்சம் ரூபாயும் இருப்பதாக நிதி அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Caption

கையிருப்பே இவ்வளவு நிதி இருக்கும் போது ஏன் ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் நிதி பெறுகின்றனர் என்றும், ஒரே ஒரு இல்லத்தை நடத்த இவ்வளவு நிதி தேவையா என்றும் கேள்வி எழுகிறது. மேலும் FCRA NGOக்களால் நடத்தப்படும் இத்தகைய இல்லங்களில் பாலியல் குற்றங்கள் நடப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், ஏன் இவற்றை இழுத்து மூடக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பாதிரியாரால் தாக்கப்பட்ட ராஜம்மாள் காப்பகத்தில் உள்ள முதிய பெண்களிடம் கூட தவறாக நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சென்னையில் பல பெரிய NGOக்களிடம் இருந்து நிதி பெற்று உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த SEERS என்ற காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சீல் வைக்கப்பட்ட செய்தி வெளியாகி சில நாட்களே ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவம் அண்மையில் 28 ஆண்டுகள் கழித்து இதே போன்று பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி இடையிலான தவறான உறவைப் பார்த்ததால் கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி அபயா வழக்கை ஒத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News