இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டு நெசவாளர் அறிமுகப்படுத்தும் கலக்கலான 'மூங்கில் நூல் புடவைகள்' .!
இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டு நெசவாளர் அறிமுகப்படுத்தும் கலக்கலான 'மூங்கில் நூல் புடவைகள்' .!
இந்த வருட தீபாவளி கலெக்சனில், மூங்கில் நூலால் செய்யப்பட்ட சேலையை தமிழக நெசவாளர் அறிமுகப் படுத்தி உள்ளனர். மூங்கில் நூலால் செய்யப்பட்ட சேலை எங்க அறிமுகம் செய்யப்பட்டது என்றால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பூம்பூஹார் ஷோரூமில் நடந்து வரும் தீபாவளி திருவிழாவில், கைத்தறி நெசவாளர்கள் பிரசித்தி பெற்ற 'மூங்கில் புடவைகள்' என்ற ஒரு புதுவித கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த குறித்த நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தீபாவளியில் வாழை நூலால் செய்யப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்தி, அது மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. அதே மாதிரி இந்த வருடமும் ஒரு புது மாதிரியான செயல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த டி. ஏ. குமாரன் என்பவர் களமிறங்கியுள்ளார். இவரது கண்டுபிடிப்பில் உருவான புடவை தான் இந்த மூங்கிலால் செய்யப்பட்ட புடவை இது தற்போது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
திருவிழாக்களில் நம்முடைய பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவது வழக்கமானது. அந்தவகையில் தற்போது வரை இருக்கும் தீபாவளி பண்டிகைகளையும் நம்முடைய கைவினைப்பொருட்கள் மற்றும் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக நெசவாளர்கள், இந்த ஒரு புதிய முறையை கையாண்டு உள்ளனர். அவர்களுடைய இந்த மூங்கில் நூலால் செய்யப்பட்ட புடவை கண்டுபிடிப்புகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து நன்றி தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து TNIE உடன் பேசிய குமரன் கூறுவது என்னவென்றால், "புடவைகளை நெசவு செய்ய 20 சதவீத மூங்கில் நார் மற்றும் 80 சதவீத பருத்தியைப் பயன்படுத்துவதாகக் கூறினார். நெசவு என்பது பல தலைமுறைகளாக எங்கள் குடும்ப வியாபாரமாக இருந்து வருகிறது, அது என் தந்தையால் எனக்கு கற்பிக்கப்பட்டது" என்று அவர் கூறினார். அவர் பரமகுடியில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்திலிருந்து மூங்கில் நூலை வாங்குவாராம். மேலும் ஒரு 'மூங்கில் நூலால் செய்யப்பட்ட புடவையை தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகுமாம்'.
பூம்பூஹர் ஷோரூமில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள புடவைகள் ரூ .1,000 முதல் 1,280 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.