சிறப்புக்கட்டுரை: தெலங்கானா இடைத்தேர்தல் - ஆளுங்கட்சியையே பா.ஜ.க வீழ்த்தியது எப்படி?

சிறப்புக்கட்டுரை: தெலங்கானா இடைத்தேர்தல் - ஆளுங்கட்சியையே பா.ஜ.க வீழ்த்தியது எப்படி?

Update: 2020-11-11 17:16 GMT
நேற்று பீஹார் முடிவுகள் வெளிவர வழக்கத்திற்கு மாறாக வெகுநேரம் எடுத்துக்கொண்டதாலும், மிகவும் நெருக்கமான முடிவுகள் இழுபறியாக நீடித்ததாலும், மக்களுடைய ஆர்வம் பெரும்பாலும் அந்த தேர்தல்களின் முடிவுகளில் இருந்தன. நாடு முழுக்க பல்வேறு இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அவற்றில் முக்கியமாக மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய இடங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது பா.ஜ.க-விற்கு அவசியமாக இருந்தது.

இந்த நிலையில் இவை எல்லாவற்றையும் விட விறுவிறுப்பான தேர்தல், ஒரு மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அதுதான் தெலுங்கானா. தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை உறுப்பினர்கள், அங்கு 100 உறுப்பினர்கள் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) கட்சியை சேர்ந்தவர்கள். 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள், 7 பேர் அசாவுதின் ஓவைசியின் AIMIM கட்சியை சேர்ந்தவர்கள், ஒரே ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங். 

தனது வாக்கு வங்கியை அதிகரித்து வரும் பா.ஜ.க, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 19 சதவிகித வாக்குகளை மொத்தமாக பெற்று, சந்திரசேகர ராவின் மகள் கவிதாவையே நிசாமாபாத் தொகுதியில் தோற்கடிக்கும் அளவிற்கு முன்னேறியது. இதனால் தெலுங்கானா மாநிலம் உருவான காலத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திவரும் சந்திரசேகர ராவின் கட்சிக்கு ஈடு கொடுக்கும் ஒரு எதிர்க்கட்சியாக பா.ஜ.க வளரும் என்று பலராலும் விவாதிக்கப்பட்டு  வந்தது.

இந்நிலையில், இடைத்தேர்தல் ஆளும் டி.ஆர்.எஸ்  எம்.எல்.ஏ ஒருவர் இறந்ததினால் ஏற்பட்டது. அங்கு அக்கட்சியில் தற்போது போட்டியிட்டது அவருடைய மனைவி சுஜாதா. பொதுவாகவே கணவன் இறந்த பிறகு, மனைவி அதையே தொகுதியில் போட்டியிட்டால் ஒரு அனுதாப அலை வீசும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வகையில் இங்கே நேற்று பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொகுதியை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், டுபாக்கா ஒரு சுவாரசியமான தொகுதி. அந்த தொகுதிக்கு சுற்றி முதல்வர் சந்திரசேகர ராவின் சொந்த தொகுதி, சந்திரசேகர ராவின் மகன் தொகுதி, சந்திரசேகர ராவின் மருமகன்(nephew) ஹரிஷ் ராவ் சொந்த தொகுதி உள்ளது.

இப்படி சுற்றியிருக்கும் பகுதிகள் எல்லாம் முதல்வர் சந்திர சேகர் ராவ்  குடும்பத்தினர் எம்.எல்.ஏக்களாக இருக்கும் நிலையில், இந்த தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு வெற்றி எளிதாக கிடைக்கும் என்று நாம் அனைவரும் எண்ணியிருப்போம். காங்கிரஸ் அங்கே மிகவும் வலுவிழந்து விட்டது. 2018 தேர்தலில் பா.ஜ.க அங்கே டெபாசிட் இழந்தது.

முதல்வரின் மருமகனும் தெலங்கானா மாநில நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் அந்த தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். எனவே ஆளும் கட்சி இத்தொகுதியில் எளிதில் வெற்றி பெற்று விடும் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் பா.ஜ.க-வும் அதன் தொண்டர்களும் வேறு திட்டம் வைத்து இருந்தார்கள். தற்போதைய பா.ஜ.க வேட்பாளர் ரகுநந்தன் ராவ் தெலுங்கானாவில் பா.ஜ.கவின் பிரசித்தி பெற்ற முகமாவார். இவர் இதே தொகுதியில் 2014 மற்றும் 2018 தேர்தல்களில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டவர். பெரும்பாலான தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க வின் சார்பாக பங்கேற்பவர். ஒரு வழக்கறிஞர். ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி பாணி அரசியலுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு மிகவும் திறமையானவர். அரசியலில் வெகுகாலமாக இருக்கிறார். டுபாகாவை சொந்த தொகுதியாக  கொண்டவர். தெலுங்கானாவில் கட்சி ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து TRS உடன்  இணைந்து, 2014 பிறகு பா.ஜ.கவில் இணைந்தார். ஏனெனில் கேசிஆர் மற்றும் ஹரிஷ் ராவ் அவருடைய வளர்ச்சியை கட்சியில் தடுத்தனர். இப்பொழுது தெலுங்கானா மாநில பா.ஜ.க-வின் மிக முக்கியமான வெற்றி தருணத்தில் மையப் புள்ளியாக இருக்கிறார்.

2018 சட்டசபை தேர்தல்களில் TRS, 119 இடங்களில் 88 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க ஒரே ஒரு இடத்தை கைப்பற்றி 106 இடங்களில் டெபாசிட்டை இழந்தது. ஆனால் டி.ஆர்.எஸ் 100 இடங்களை கைப்பற்ற திட்டமிட்டிருந்தார். அதனால் மூன்று மாதத்திற்குள் அங்கிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 12 பேரை கட்சியில் சேர்த்துக் கொண்டார். எனவே  சட்டசபையில் அவர் பலம் நூறாக உயர்ந்தது. சட்டசபையில் ஓவாசியின் AIMIM கட்சி 7 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. அவர்கள் TRS உடன் மிகவும் நட்புடன் இருந்தனர். எனவே சட்ட சபையில் TRS  செல்வாக்கைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

முதல்வர் சந்திர சேகர் ராவுக்கு ஒரு கடும் அதிர்ச்சி 2019 லோக்சபா தேர்தல்களில் வந்தது. அதற்கு முக்கியமான காரணம், அவருடைய மகள் கவிதா நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில் பா.ஜ.க-விடம் தோல்வியுற்றார். இரண்டாவது கரீம்நகர் லோக்சபா தொகுதியிலும் பா.ஜ.க வென்றது. அது அவருடைய மகன் KTR-ன் சொந்த  தொகுதி. அவர்கள் குடும்பத்திற்கு ஏற்படவிருந்த இந்த பாதிப்பை எந்த கருத்து கணிப்பும் தெரிவிக்கவில்லை.

பா.ஜ.க-வும்,காங்கிரசும் தலா நான்கு தொகுதிகளை வென்றது. பா.ஜ.க வெற்றி பெற 2019 மோடி அலை தான் காரணம் என்று கூறப்பட்டது. பா.ஜ.கவிற்கு சட்டசபையில் ஒரு வலிமையான குரல் இல்லை. அவ்வப்போது டி.ஆர்.எஸ் - AIMIM-க்கு இடையே நட்பு ரீதியிலான விவாதங்கள் வரும். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யாரும் கண்டுக் கொள்வதில்லை.

முதல்வர் சந்திர சேகர் ராவ் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார். அவர்களுடைய பேச்சு ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரும். பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை அங்கே மக்களை கொண்டுபோய் சேர்ப்பதற்கும் அதை தவிர TRS, ஹரிஷ் ராவ் ஆகியோருக்கு இணையான அவர்கள் பாணியில் ஈடு கொடுக்கின்ற அளவிற்கு பலமான குரல்கள் அவர்களுக்கு வேண்டும்.

இந்த மாதிரியான முகங்களையும் குரல்களையும் அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க தலைவரும், கரீம்நகர் எம்.பி சஞ்சய், முதல்வர் மகளைத் தோற்கடித்த அரவிந்த் தர்மாபுரி போன்றவர்களும் கிடைத்தனர். இப்படி பா.ஜ.க-விற்கு ஒரு புதிய எழுச்சி முகங்கள் கிடைத்துக் கொண்டிருந்த பொழுது, டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ மறைந்து போனார்.

இடைத்தேர்தல் வந்தது. அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகவே ரகுநந்தன் ராவ் தெருக்களில் இறங்கினார். அவருடைய பேச்சு திறமை, முதல்வருக்கு  எதிராக இருந்த அதிருப்தியை பயன்படுத்த உதவியது. நிலைமையை அறிந்து கொண்டு, தன்னுடைய மொத்த கட்சி அமைப்பையும் ரகுநந்தனுக்கு, பி.ஜே.பி-யும் எதிர்த்து நிற்க பயன்படுத்தினார் KCR. 

புதிய பா.ஜ.கவும் பின் வாங்கவில்லை. அவர்களும் தங்கள் பிரச்சாரத்தில் முரட்டுத்தனமாக சென்றனர். ரகுநந்தனின் உறவினர்களின் வீட்டில் காவல்துறையினர் ரெய்டு செய்தனர். பா.ஜ.க மாநில தலைவரை லத்தியால் அடித்தனர். மாநிலத்தில் மதப் பிரச்சனைகளை தூண்ட முயற்சிப்பதாக பா.ஜ.க மீது குற்றம் சாட்டினர். ஆனால் எதுவும் பா.ஜ.க-வை சோர்வடைய செய்யவில்லை. அவருடைய தலைவரும் தொண்டர்களும் டி.ஆர்.எஸ் வேட்பாளரை வீழ்த்துவதற்காக தங்களுடைய ஒட்டுமொத்த வியர்வையையும் அங்கே சிந்தினர்.

ரகுநந்தனை விட பா.ஜ.க சார்பாக ஒரு சிறந்த எம்.எல்.ஏ-வை நாம் சட்டமன்றத்தில் எதிர்பார்க்க முடியாது. கண்டிப்பாக அவரின் பேச்சுத்திறமை சட்டசபையில் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். மோடி மற்றும் அமித் ஷா பா.ஜ.க புதிய தலைவர்களை நாடு முழுவதும் இப்படித்தான் உருவாக்குகிறார்கள். தங்கள் மீதிருக்கும் எதிர்பார்ப்புகளின் அளவிற்கு ஈடு கொடுக்கும் மிகப்பெரிய பணி பா.ஜ.க-விற்கு இருக்கிறது. தெலுங்கானாவில் அடுத்து வரும் அரசியல் சூழ்நிலைகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Courtesy: Translated From OpIndia

Similar News