மின்னல் வேகத்தில் நடைபெறும் திருவாரூர் கருணாநிதி அருங்காட்சியகம் கட்டிட பணிகள் - திறப்பு விழா எப்போது?

திருவாரூரில் கருணாநிதி அருங்காட்சியகம் மற்றும் நினைவிடம் ஆகஸ்டில் திறக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Update: 2022-06-02 12:00 GMT

திருவாரூரில் கருணாநிதி அருங்காட்சியகம் மற்றும் நினைவிடம் ஆகஸ்டில் திறக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

கலைஞரின் ஊர் என பெருமையுடன் தி.மு.க'வினர் கூறிக்கொள்ளும் திருவாரூரில் உள்ள காட்டூரில் கலைஞர் தாயார் நினைவிடத்திற்கு அருகாமையில் கலைஞர் அருங்காட்சியகமும், மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் பணிகளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டத்திற்கு விஜயம் செய்த முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

31ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் கார்ட்டூன் உள்ள தனது பார்ட்டியும் கருணாநிதியின் தாயாருமான அஞ்சுகம் அம்மையாரின் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பின்பு நினைவிடம் அமைந்து வரும் இடத்தில் வேலைகளை அவர் பார்வையிட்டார்.

இதுகுறித்து அப்பகுதி திமுக முக்கிய நிர்வாகிகள் கூறும்போது, 'இங்கு மிகவும் பிரம்மாண்டமாக கருணாநிதி அருங்காட்சியம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது முதல்வர் ஸ்டாலின் இதை பார்வையிட்டுள்ளார் வரும் ஆகஸ்ட் மாதம் கருணாநிதியின் நினைவு நாளன்று இதனை தெரிந்து வைப்பதாக தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது. 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது கட்டப்பட்டு வருகிறது இதன் கட்டுமான பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையிலான தி.மு.க பிரமுகர்கள் கவனித்து வருகின்றனர்' என்றார்கள்.


Image & Article Source - Junior Vikatan

Similar News