பழனி முருகன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 84 லட்சம்.!
பழனி முருகன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 84 லட்சம்.!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.
தமிழ் கடவுள் என்று சொல்லப்படும் முருகன் திருக்கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூசம் என்பதாலும், பொதுவிடுமுறை விடப்பட்டதாலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் கோயிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியது.
இந்நிலையில், உண்டியல்களில் உள்ள பணத்தை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ரொக்கமாக 2 கோடியே 82 லட்சத்து, 14ஆயிரத்து, 370ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. தங்கம் 910 கிராமும், வெள்ளி 840 கிராமும் வருவாயாக கிடைத்தன. மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டுகளை சேர்ந்த கரன்சிகள் 57 நோட்டுக்களும் கிடைத்துள்ளன.
பழனிக்கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், பழனியாண்டவர் கலைக்கல்லூரி ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.