சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடங்கியது ஆருத்ரா தேரோட்டம்.!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடங்கியது ஆருத்ரா தேரோட்டம்.!
மார்கழி மாத சிதரம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன விழாவின் தேரோட்டம் தகுந்த கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சற்று முன்னர் தொடங்கியது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது.
ஆன்லைன் முன்பதிவு முறையை ரத்து செய்தால் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படும் தீட்சிதர்கள் அறிவித்திருந்தன. இதன் பின்னர் பொதுமக்கள் நலன் கருதி தற்போது தேரோட்டத்தை தீட்சிதர்கள் நடத்தி வருகின்றனர்.
மூலவரான நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித்தனியாக தேரில் பவனி வருகின்றனர். இதனைக் காண்பதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்வது கட்டாயம் என ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, தற்போது முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் ஏராளமானோர் கோயிலில் கூடியிருக்கின்றனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய வீதிகள் வழியாக இன்று மாலை வரை தேரோட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் உச்ச நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.