அதிர்ஷ்த்தை ஈர்க்க வீட்டில் கிளி வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் சொல்வதென்ன?

அதிர்ஷ்த்தை ஈர்க்க வீட்டில் கிளி வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் சொல்வதென்ன?

Update: 2020-11-09 05:15 GMT

வீடுகளில் செல்ல பிராணி வளர்ப்பது வழக்கம். ஆனால் ஜோதிடத்தில், ஆன்மீகத்தில் நம்பிக்கை இருப்பின் எந்தெந்த பிராணிகளை வீட்டின் நன்மைக்காக வளர்க்கலாம் என்கிற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வழக்கமாக நாய், பூனை, லவ் பர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பார்கள்.

இவற்றையும் தாண்டி பல விதமான செல்ல பிராணிகள் வீட்டில் வளர்க்கப்படும். அதில் குறிப்பிட்ட ஒன்று கிளி. கிளியினுடைய வசீகரமான அழகும். அதன் துருதுருப்பான சேட்டைகளை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்க கூடிய ஒன்று. அதிலும் சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல சொன்னதையே திரும்ப சொல்லும் அழகு மிக சிறப்பு.

அழகியலியலை தாண்டி, வாஸ்து ரீதியாக கிளியை வளர்ப்பது நன்மையா மிக நிச்சயமாக நன்மையே.. அதுவும் குறிப்பாக் வட புறத்தில் கிளியை வளர்ப்பது மிகவும் சிறப்பு. இவ்வாறு வைத்து வளர்க்கிற போது, வீட்டில் இருக்கும் குழந்தைகளின் நியாப சக்தி மிகவும் வலுவாக இருக்கும் என்பது நம்பிக்கை. அன்பு, நேர்மை, நீடித்த உறவு நல்ல அதிர்ஷ்டம் போன்ற பல விஷயங்களின் குறியீடாக கிளி இருக்கிறது. வீட்டில் ஆழுத்தமோ அல்லது யாருக்கேனும் உடல் நலம் குன்றியிருந்தாலோ வீட்டில் கிளியின் படமோ அல்லது சிலையோ இருப்பது வாஸ்து ரீதியாக நன்மை தரும் என சொல்லப்படுகிறது.

ஜோடி பறவைகளை வளர்க்கிர போது, அவை வீட்டில் இருக்கும் கணவன், மனைவியிடம் நல்ல அன்பை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. ஜோதிடர்களின் கூற்று படி கிளியை வளர்ப்பது ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதக கட்டத்திற்கும் பலன்கள் மாறுபடும் என சொல்கிறார்கள். எனவே கிளியை வளர்க்கும் முன் ஒருமுறை ஜோதிடரை அணுகி வழிகாட்டுதல்களை பெறலாம்.

மற்றொரு முக்கியமான விஷயம் வீட்டில் வளர்க்கப்ப்டும் கிளி, நிறைவின்றி ஒருவித தவிப்புடன் இருக்குமாயின் அது அக்கிளியை வளர்ப்பவருக்கு நல்ல விளைவை கொடுக்காது. மேலும் சொன்னதை சொல்லும் பழக்கம் கிளிக்கு இருப்பதால், வீட்டில் எப்போதும் நல்ல மங்களகரமான வார்த்தைகள் அதிகம் புழங்கினால் அவற்றை அதுவும் திரும்ப சொல்லும். இது நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும்.

Similar News