லண்டனில் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை வணங்கிய முதல்வர்.!

லண்டனில் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை வணங்கிய முதல்வர்.!

Update: 2020-11-20 15:58 GMT

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது நமது நாட்டில் உள்ள கோயில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிலைகள்தான் அதிகளவு திருடு போயுள்ளது. இதனை கண்டுப்படிக்க காவல்துறையில் புதிய பிரிவை அரசு ஏற்படுத்தியது.


இந்நிலையில், லண்டனில் இருந்து மீட்டு வரப்பட்ட ராமர், சீதை, லட்சுமணன் சாமி சிலைகளை ஏற்கனவே அச்சிலைகள் இருந்த நாகை மாவட்டம், அன்ந்தமங்கலத்திலுள்ள ராஜகோபால் பெருமாள் கோயில் செயல் அலுவலரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்தார்.


அதாவது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட அக்கோயிலில் இருந்து கடந்த 1978ம் ஆண்டு திருட்டு போன அச்சிலைகள், லண்டனில் இருப்பது தமிழக சிலை கடத்தல், தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்டு வரப்பட்ட சிலைகள், சென்னையில் முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.


இதனை தொடர்ந்து அச்சிலைகளை பார்வையிட்டு பின்னர் வணங்கினார். பின்னர் சிலைகள் மீட்க காரணமாக இருந்த தமிழக காவல்துறை சிலை கடத்தல் பிரிவினரையும் முதலமைச்சர் வெகுவாக பாராட்டினார்.

Similar News