வெற்றியும், பணமும் நிறைவாய் இருக்க இந்த பழக்கங்களை வளர்த்து கொள்ளுங்கள்!

வெற்றியும், பணமும் நிறைவாய் இருக்க இந்த பழக்கங்களை வளர்த்து கொள்ளுங்கள்!

Update: 2020-12-24 06:00 GMT

நம்முடைய வெற்றிக்கும் பொருளாதார மகிழ்ச்சிக்கும் நம்முடைய கடின உழைப்பு மட்டுமே காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கடின உழைப்பின் மூலமும் விடா முயற்சியின் மூலமும் பெறுகின்ற செல்வமும், பொருளும் தான் அறவழியில் ஈட்டும் பொருளாகும்.

 அதனடிப்படையில் நம்முடைய முன்னோர்களும் நம்முடைய புராண புத்தகங்களும் ஒரு மனிதரிடம் சில குறிப்பிட்ட குணநலன்கள் இருந்தால் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என கூறியிருக்கிறது. அதில் முதலாவதாக பெற்றோர்களிடம் தினசரி ஆசி பெறுவது அவசியம். இது  முக்கியமான பழக்கமாகும் எப்போதும் அவர்களுடன் பேசும்போது மிக மென்மையான குரலில் பேச வேண்டும்.

 ஒருபோதும் அவர்களை மரியாதை குறைவாக நடத்துவதும் கூடாது. இரண்டாவது சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின்படி பெண்கள் என்பது ஆதிசக்தியின் அவதாரம் ஆகும். எனவே அவர்களை மரியாதையுடன் நடத்துவது மிக அவசியம். உடனடியான வெற்றியை புகழை நீங்கள் பெற விரும்பினால் உங்களிடம் இருக்கும் ஐந்து தவறான குணங்களை உடனடியாக விட வேண்டும்கோபம், காமம், பேராசை ஆணவம் மற்றும் தவறான வழியில் சேமித்த செல்வம் இந்த ஐந்தையும் ஒருவர் கைவிடும் பொழுது அவருக்கு நிஜமான வெற்றியும், மனநிறைவான மகிழ்ச்சியும் கிடைக்கிறது

நான்காவதாக தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவும் குணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஐந்தாவதாக கை நிறைய தானியங்களை பறவைகளுக்கு உணவாக அளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் பொழுதும் அந்த உணவு நம்மை வந்து சேர்வதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நம்முடைய நன்றியை நாம் தெரிவிக்க வேண்டும்.

 பொருளாதார ரீதியான நன்மைகளைப் பெறுவதற்கு ஏதுவாக சொல்லப்படும் வழக்கம் யாதெனில் நீங்கள் உறங்குவதற்கு முன்பு உங்கள் அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் நாணயம் அல்லது வெள்ளி பொருட்கள் ஏதோ ஒன்றை அந்த செம்பு பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும் மறுநாள் காலை கண் விழித்த உடன் முதல் வேலையாக அந்த நீரை பருகுவது நமக்கு நல்ல அதிர்வுகளை உடலில் அதிகரிக்கச் செய்யும்.

இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் பழகி கொள்வது நம்முடைய வெற்றிகரமான வாழ்வை உறுதிப்படுத்தும்.

Similar News