வளமான வாழ்விற்கு மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது! வேறென்னென்ன செய்யக்கூடாது?

வளமான வாழ்விற்கு மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது! வேறென்னென்ன செய்யக்கூடாது?

Update: 2021-02-15 07:42 GMT

பெண்கள் நம் கண்கள் என்ற பழமொழி உண்டு. பெண்களால் ஒரு வீட்டை, ஏன் சமூகத்தையே உருவாக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வளத்தினை பெருக்க பெண்கள் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழலும், வெவ்வேறு மாதிரி இருக்கிற போது, இவற்றையெல்லாம் ஒருவரால் பின்பற்ற முடியாமலும் போகலாம். ஆனால் இப்படியான சாஸ்திர விதிகள் இருப்பதை அறிந்து கொண்டு, நேரம் கிடைக்கிற போது இவற்றை பழக்கப்படுத்தலாம் இல்லையா? எனவே, பெண்களுக்கென பரிந்துரைக்கப்படும் வாஸ்து குறிப்புகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.

மாலை நேரத்தில் விளக்கு வைத்த பின், பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது பணப்புழக்கத்திற்கு ஏதுவானது அல்ல.பொழுது சாய்ந்த பின் பெண்கள் குளிப்பது வீட்டின் நல்லாற்றலை குறைக்கக்கூடும் . சமையல் என்பது அன்னபூரணியின் அம்சம், எனவே குளித்த பின் சமைப்பதே சரியான பழக்கம். மேலும் மருத்துவ ரீதியாக இது ஆரோக்கியமானதும் கூட.  வாஸ்து சாஸ்திரத்தின் படி, இரவு மற்றும் மாலை நேரங்களில் பெண்கள் தலை வாருவதை தவிர்த்தல் நலம்.

வீட்டில் நீர்நிலைகளான நீச்சல் குளம், தொட்டி போன்றவைகளை தென்மேற்கு மூலையில் வடிவமைக்க கூடாடது . இது வீட்டில் வருமையை உருவாக்க கூடும்.  வீட்டின் பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைத்திருக்க அது குபேரரின் ஆசிர்வாதத்தை பெருக்கும்.

மேலும் பணப்பெருக்கத்தை அதிகரிக்க வாஸ்தது சாஸ்திரம் சொல்லும் மற்றொரு குறிப்பு என்னவெனில், பணப்பெட்டிக்கு பின்பாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும். அதில் பணம் அல்லது பணப்பெட்டி பட்டு எதிரொளிக்கும் போது அது பணப்பெருக்கத்தை இரட்டிப்பாக்கும் என்பது நம்பிக்கை.

வீட்டினை கட்டும் பொழுது, மிக முக்கியமாக நினைவில் வைத்து கொள்ள வேண்டிய வாஸ்து குறிப்பு என்னவெனில், வீட்டினை கட்டுகிற போது, சாலையும் வீட்டின் வாசலும் சமமான அளவினதாக கூட இருக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும், பூமிக்கு கீழ் செல்வதாக வாசல் அமையக்கூடாது. அது பொருளாதர இறக்கத்தை குறிக்கும். அதனாலேயே வீட்டின் வாசலை சாலைகளில் இருந்து ஏற்றி கட்ட பரிந்துரைக்கிறது வாஸ்து சாஸ்திரம்.

Similar News