கடலில் காணாமல் போகும் அதிசய சிவாலயம்! அருள் இருந்தால் தரிசிக்கலாம்!
ஸ்தம்பேஸ்வர மகாதேவர் திருக்கோவில்
சைவ வழிபாடு உலகம் முழுவதிலும் பெரும் புகழ்பெற்றது. சிவனை பல விதமான வடிவங்களில் வழிபடும் ஏராளமான கோவில்கள் இந்தியாவெங்கும் உண்டு. ஆனால் இந்த சிவன் உலகின் மிகப்பெரும் அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறார்.
இவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின் கண்களுக்கு தென்படுவார். இங்கு இருக்கும் சிவன் கோவிலை 150 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டறிந்துள்ளனர். இக்கோவில் அரபிக் கடலின் கரையில் கட்டப்பட்டுள்ளது. சமீப காலத்தில் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரும்பாலும் கடலினுள் மூழ்கி விடுகிறது இக்கோவில்.
ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒரு முறை மட்டுமே இக்கோவில் தென்படுகிறது. அவ்வாறு தென்படுகிற வேளைக்காக கால் கடுக்க காத்திருக்கின்றனர் பக்தர்கள். ஒவ்வொரு நாளும் அலைகள் உள்வாங்கி நீர்மட்டம் குறைகிற போது சிவன் தரிசனம் கிடைக்கையில் பெரும் ஆராவாரத்துடன் பக்தர்கள் ஆர்பரிக்கின்றனர்.
அரக்கனான தாராகாசுரனை வதைத்த போது, மிகவும் குற்றவுணர்வுடன் தவித்துள்ளார் முருகர். காரணம், தாராகசுரன் சிவ பக்தர் என்பதால். இந்த குற்ற உணர்விலிருந்து விடுபட, என்ன செய்யலாம் என பிரம்ம தேவரை வணங்கி முருகர் வேண்டிய போது. சிவ பக்தர் அரக்கராக இருந்ததாலேயே அவன் கொல்லப்பட்டான் இதற்காக குற்ற உணர்வு கொள்ள தேவையில்லை. இருந்தாலும், குற்ற உணர்வு அதிகமாக இருக்குமாயின் சிவனை வழிபடுவதே இதற்கு வழி என கூறியுள்ளார். அப்போது முருகர் உருவாக்கிய திருத்தலமே இது என்பது வரலாறு.
அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச நன்நாட்களில் சிவனின் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர் பக்தர்கள். அதிசயம் போல், அந்நாளில் நிச்சயம் அலை விலகி அவர் தரிசனமும் கிடைக்கிறது. பக்தி பெருக்கில் வரும் பக்தர் கூட்டத்தை போலவே, இந்த இயற்கையின் அதிசயத்தை ரசிப்பதற்கும் பெருங்கூட்டம் இங்கே வருகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து, ஏன் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் இங்கே குவிகின்றனர்.
இங்கிருக்கும் சிவன் ஸ்தம்பேஸ்வர மஹாதேவர் என அழைக்கப்படுகிறார். இந்த இடம் குஜாராத் மாநிலத்தில் கவி காம்போய் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் வதோராவிலிருந்து 75 கி.மீ தொலைவிலும், இரயில் மற்றும் இதர போக்குவரத்தின் மூலம் இந்த இடத்தை அடையலாம். இந்த கோவிலுக்கென்று ப்ரத்யேக வலைதளத்தையும் உருவாக்கியுள்ளனர். இதில் கோவில் தரிசன நேரம் போன்ற விபரங்கள் பதிவேற்றப்படுகின்றன.