நானூறு ஆண்டுகள் பழமையான தாந்த்ரீக கோவில். அதிசயங்கள் நிகழுத்தும் ஆலயம்.!

நானூறு ஆண்டுகள் பழமையான தாந்த்ரீக கோவில். அதிசயங்கள் நிகழுத்தும் ஆலயம்.!

Update: 2021-02-16 19:50 GMT

பீகார் மாநிலம் பாட்சர் பகுதியிலே அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி பாலா திரிபுரசுந்தரி கோவில் குறித்த ஆச்சர்ய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மர்மம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை விரும்புகிற பயணிகள் நிச்சயம் செல்ல வேண்டிய கோவில்.

இந்த கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. இங்கிருக்கும் கடவுள்களை வேத முறையிலும், தாந்த்ரீக முறையிலும் வழிபடுவது வழக்கமாக உள்ளது. தாந்த்ரீக முறையை பின்பற்றுபவர்களின் முக்கியமான கோவிலாகவும் இக்கோவில் உள்ளது.

இங்கிருக்கும் மூல தெய்வம் லலிதா திரிபுர சுந்தரி எனினும், பிரதிஷ்டை செய்யப்பட்ட காளி படம், தாரா, புவனேஸ்வரி சின்னமஸ்தா, பித்தாம்பரா, துமவத்தி, மாதங்கி, மற்றும் கமலா ஆகிய தேவியருடன் பைரவர், தாதாத்ரி, ஆகிய கடவுள்களுக்கும் வழிபாடு நிகழ்கிறது.

இந்த கோவிலின் ஆச்சர்ய நிகழ்வு என்னவெனில், இந்த கோவிலுக்குள் இருக்கும் கடவுள்கள் மனிதர்களை போலவே பேசி கொள்கிறார்களாம். இரவு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்ட பின், இக்கோவிலை சுற்றியுள்ள மக்களுக்கு யாரோ பேசும் ஒலி இக்கோவிலின் உள்ளிருந்து கேட்டவாறே உள்ளதாம்.

இதன் உண்மைத்தன்மையை ஆராய நினைத்தவர்கள் கூட ஆச்சர்யப்படும் அளவிற்கு இங்கு அச்சம்பவம் இன்றும் நிகழ்கிறது. இதன் காரணத்தை இன்றும் யாராலும் கண்டறிய முடியவில்லை. ஒரு சில் ஆய்வாளர்கள், இந்த கோவிலின் சுவர்களுக்கு சப்தத்தை எதிரொலிக்கும் தன்மை இருக்கிறது என்றும் அந்த எதிரொலி சப்தமே பேச்சு சப்தமாக கேட்கிறது என தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த கூற்றை இந்த கோவில் அர்ச்சகர்கள் மறுக்கின்றனர். அந்த குரல் பாலா திரிபுர சுந்தரியினுடையது என்றும். ஒலிக்கும் குரலானது, தாயின் அருள்மொழி என்றும் கூறுகின்றனர். மேலும் இங்கே விக்ரகங்கள் இரவில் பேசுவது உண்மை என்று அழுந்த கூறுகின்றனர்.

விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்பது என்றும் மாறாதது. பால திரிபுர சுந்தரியை வணங்கியோருக்கு வினையில்லை. மேலும் இக்கோவிலின் முகப்பில் பிரமாண்ட வளைவிருப்பது அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

நம் நாட்டில் ஆச்சர்யம் நிறைந்த கோவில்களும், வழிபாடுகளும் பல இடங்களில் இருக்கின்றன. அதில் முக்கியமான திருத்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News