பழனி கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான விடுதிகள் மீண்டும் திறப்பு.!

பழனி கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான விடுதிகள் மீண்டும் திறப்பு.!

Update: 2021-02-11 19:00 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக பழனி கோயிலில் தங்கும் விடுதிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் பூட்டப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் இன்று முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோயிலுக்கு சொந்தமாக தண்டபாணி நிலையம், கோசாலை மற்றும் இடும்பன் குடில் என்ற பெயர்களில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் அறை கிடைக்கும்.

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக பூட்டப்பட்டிருந்த அறைகள் இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று தண்டபாணி நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அறைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இனி வரும் காலங்களில் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம்.
 

Similar News