பூஜையறையில் எத்தனை திருவுருவ படங்களை வைக்க வேண்டும்? சாஸ்திரம் சொல்வதென்ன?
பூஜையறையில் எத்தனை திருவுருவ படங்களை வைக்க வேண்டும்? சாஸ்திரம் சொல்வதென்ன?
மற்ற மதங்களை போல் அல்லாமல் இந்து மதத்தின் தனித்துவம் என்பது உருவ வழிபாடு. வீடுகளில் உருவங்களை அல்லது பொருள் தன்மையிலான சில குறிப்பிட்ட புனித பொருட்களை வணங்குதல் வழக்கம். இந்த திருவுருவ படங்களை சிலைகளை வீடுகளை, தொழில் நிகழும் இடங்களில் குறிப்பிட்ட திசையில், குறிப்பிட்ட இடத்தில் பூஜை அறையில் முறையான பூஜைகளுடன் வைத்து வணங்குவதால் நம்மை இறைநிலையுடன் எப்போதும் தொடர்பில் வைத்துக்கொள்ள இந்த இடமும், வழக்கமும் நமக்கு உதவுகிறது.
இறைவனை வீடு தோறும் வைத்து வணங்குவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. பலரும் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றனர். அதாவது, இறைவனை வீடுகளில் பூஜிப்பதால் தீமை நம்மை அண்டாது என்பதை மட்டுமே முக்கிய அம்சமாக கருதுகின்றனர். இறைவனை வீடுகளில் வைத்து வழிபடுவதில் மற்றொரு அம்சமும் உண்டு. அது என்னவெனில், நாம் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது, நம் மனதில் எந்த காரண்த்திற்காகவும், தீய எண்ணாமல் தோன்றாமல் இருக்கவும் தெய்வத்தின் அருள் தேவை.
எனவே நம் சாஸ்திரங்களில் வீடு தோறும் பூஜை இருக்க வேண்டும், அறையில்லாத பட்சத்தில், இறைவனின் பட த்தை வைத்தேனும் வழிபட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சில வழிமுறை வகுக்கப்பட்டுள்ளன அவை என்னவெனில்,
பூஜை அறை, அல்லது திருவுருவபடங்கள், படுக்கை அறையினில் இருக்க கூடாது. குளியலறைக்கு அருகாமையிலோ அல்லது எதிர்புறமோ பூஜையறையை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
வீடுகளிலிருந்து சில நாட்கள் தள்ளியிருக்கும் சூழல் ஏற்படுகிற போது, உதாரணமாக, வெளியூர் பயணம் போன்ற சூழலில், நெடுநாட்கள் வீட்டை பூட்ட வேண்டுமெனில், எக்காரணம் கொண்டும் பூஜையறையை புட்டாதீர்கள். முறையாக சுத்தம் செய்து, பூஜையறையை மாத்திரம் திறந்த நிலையில் வைத்திருங்கள்.