எந்தெந்த கடவுளுக்கு எத்தனை முறை ஆரத்தி சுற்ற வேண்டும்? சாஸ்திரம் சொல்வதென்ன?
எந்தெந்த கடவுளுக்கு எத்தனை முறை ஆரத்தி சுற்ற வேண்டும்? சாஸ்திரம் சொல்வதென்ன?
இந்து மரபில் பூஜைகள் செய்கிற போது அனைத்து செயல்களுக்கு பின்னும் அறிவியல் சார்ந்த காரணங்களும் இருக்கும். ஆனால் அந்த உண்மைகள் குறித்து அறியாமல் நாம் மிக மேலோட்டம்மாக சில செயல்முறைகளை செய்கிறோம். அதிலொன்று இறைவனுக்கு ஆரத்தி காட்டுவது.
கடவுளுக்கு ஆரத்தி காட்டுகிற போது வலது புறமாக இறைவனின் அனாகத சக்கரம் ( இதயப் பகுதியில்) இருந்து துவங்கி ஆஞ்னா சக்கரம் ( நெற்றி பகுதி ) வரையில் வந்து முடிவதாக இருக்க வேண்டும். இதனுடைய உண்மையான பலன்களை ஒருவர் முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனில் அதன் அர்த்தத்தை முழுமையாக உணந்து செய்ய வேண்டும்.
ஆரத்தி என்பதன் அர்த்தம் இடர்களை நீக்குவது ஆகும். பொதுவாக மூன்று முறை ஆரத்தி சுற்றப்படுகிறது. ஆனால் சாஸ்திரத்தில் ஒவ்வொரு தேவர்களுக்கும், கடவுளுக்கும் ஒவ்வொரு சுற்று முறை உண்டு. ஒரு சுற்று என்பது நெய்யாலான அல்லடு எண்ணை தீபம் ஏற்றி இறைவனுக்கு அர்பணிப்பது ஆகும்.
விஷ்ணு பெருமானுக்கு பன்னிரண்டு முறையும், ருத்ரனுக்கு ஒன்று அல்லது நான்கு முறையும் துர்கை அம்மனுக்கு ஒன்பது முறையும் சூரிய தேவனுக்கு எழு முறையும் ஆரத்தி காட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.
ஆரத்தி நிறைவடைந்த பின் பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த ஆரத்தி வழங்கப்படும். அப்போது பக்தர்கள் தீபத்தை தங்கள் கைகளால் சுற்றி, அந்த கதகதப்பை தங்கள் முகத்திலும், தலையிலும் ஒற்றிக்கொள்வது வழக்கம். இதன் பொருள் நாம் அக்னியால் சுத்திகரிக்கப்பட்டு புனிதம் அடைகிறோம் என்பதாகும். அவ்வாறு ஒவ்வொரு முறை தீபத்தை கண்களில் ஒற்றி கொள்ளும் போதும் நம் மனதில் எழ வேண்டிய சிந்தனை யாதெனில்,
இந்த தீபம் எவ்வாறு கீழ்நோக்கி செல்லாமல், மேல்நோக்கி மட்டுமே எரிகிறதோ. அதை போலவே, எந்த தருணத்தில் ஆன்மீகத்தின் பாதையில் நான் பின்வாங்காமல், முன்னோக்கி முன்னேறி உன்னை சரணடைய வேண்டும் என்பதே ஆகும்.